
பாலிவுட் சூப்பர்ஸ்டார் ஷாருக்கான் விமான விபத்தில் இறந்துவிட்டார் என்று வதந்தியை பரப்பிவிட்டு விசகிருமிகள் அட்டூழியம் செய்துள்ளனர்.
ஷாருக்கான் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு ஜோடியாக கத்ரீனா கைஃப் நடிக்கிறார்.
இந்த நிலையில் மும்பையில் உள்ள பிலிம் சிட்டியில் வேறொரு படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது படப்பிடிப்பு தளத்தின் செட் உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில், ஷாருக்கானுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விபத்தில் படக்குழுவைச் சேர்ந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் அந்தேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், ஷாருக்கான் பாரிசில் தனது உதவியாளருடன் தனி விமானத்தில் சென்றபோது விமான விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் வதந்தி வேகமாக பரவியது. இதனை உண்மை என்று நம்பி பலரும் கவலை அடைந்துள்ளனர்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் ஐஸ்வர்யா ராய் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாகவும், கடந்த ஆண்டு அமிதாப் பச்சன் இறந்துவிட்டதாகவும் செய்திகளை பரவவிட்டு குளிர்காய்ந்துள்ளனர் விசகிருமிகள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.