உதயநிதியை சூடாக்கிய எஸ்.ஆர்.பி.! 

 
Published : Jun 01, 2017, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 12:41 AM IST
உதயநிதியை சூடாக்கிய எஸ்.ஆர்.பி.! 

சுருக்கம்

Director Prabakaran hide Udhayanidhi Stalins Idhu Kadhirvelan Kadhal

ஒரு படைப்பை அதன் கர்த்தாவே மறைக்க, மறக்க  நினைக்கிறார் என்றால் அது எந்தளவுக்கு அவருக்கு மன நோகலை கொடுத்திருக்கும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். 

ஆனால் உதயநிதி ஸ்டாலினின் இயக்குநரின் இப்படியான ஒரு செயல் உதயநிதிக்குதான் ஆத்திரத்தையும், ஆதங்கத்தையும் தந்திருக்கிறது. 

சசிக்குமாரை வைத்து ’சுந்தரபாண்டியன்’ எனும் ஹிட் படத்தை கொடுத்த எஸ்.ஆர்.பிரபாகரனுக்கு அடுத்த பட வாய்ப்பை கொடுத்தவர் உதயநிதி ஸ்டாலின். அவரது ரெட்ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க, உதயநிதி ஹீரோவாக நடிக்க ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தை பிரபாகரன் இயக்கினார். 

நயன்தாரா சம்பளம் மட்டுமே இதில் காஸ்ட்லி. மற்றபடி மினிமம் பட்ஜெட் படமான இ.க.கா. ஓரளவு நன்றாகவே வசூல் அள்ளியது. பெரிய குறையொன்றுமில்லை. 

ஆனாலும் உதயநிதிக்கும், பிரபாகரனுக்கும் இடையில் என்ன கசப்போ தெரியவில்லை, அந்த கோபத்தை தனது மூன்றாவது படத்தில் காட்டியிருக்கிறார் எஸ்.ஆர்.பி. 

சத்யஜோதி பிலிம்ஸின் டி.ஜி.தியாகராஜன் தயாரிக்க விக்ரம் பிரபு நடிப்பில் பிரபாகரன் இயக்கியிருக்கும் படம் ‘சத்ரியன்’. வெளிவர தயாராகியிருக்கும் இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ டிரெய்லரில், பிரபாகரன் தனது பெயரை 'from the director of சுந்தரபாண்டியன்’ என்றுதான் போட்டிருக்கிறாரே தவிர அதில் ‘இ.க.கா.’ பற்றி குறிப்பிடவேயில்லை. 

பிரபாகரன் ஆறேழு படங்களை இதுவரை இயக்கியிருந்தாலும் கூட அவற்றையெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ண தேவையில்லாமல், அவற்றில் எது பெஸ்ட் மூவியோ அதன் பெயரை மட்டும் போட்டுக்கொண்டிருந்தால் பரவாயில்லை. ஆனால் இதற்கு முன் இயக்கியிருப்பது என்னவோ இரண்டு தான். அதில் ஒன்றை மட்டும் தனது அடையாளமாக காட்டுபவர், இன்னொன்றை மறைப்பது ஏனோ?

இந்த விவகாரம் நண்பர்களின் வழியே உதயநிதியின் கவனத்துக்கு போக உஷ்ணமாகிவிட்டாராம். ’வாய்ப்பு கொடுத்ததுக்கு கிடைத்த மரியாதை.’ என்று உதடு பிதுக்கினாராம். 

அப்படி என்னதான் இருவருக்குமிடையில் பிரச்னை? ஒரு மொக்கை படமாக இருந்தாலும் கூட அவர் அதை மறைப்பதில் நியாயமிருக்கிறது. காமெடி மற்றும் ஃபேமிலி சென்டிமெண்ட் ஜானரில் ஓரு பெயரை வாங்கிய இது கதிர்வேலன் காதல் படத்தை பிரபா மறப்பது, மறைப்பது ஏனோ?

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சீரியல் பரிதாபங்கள்... எதிர்நீச்சலில் இப்படி ஒரு லாஜிக் மிஸ்டேக்கா? நோட் பண்ணீங்களா மக்களே...!
கதற கதற அடிவாங்கிய கடத்தல்காரர்கள்... கிரிஷை காப்பாற்றினாரா முத்து? சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்