
பாலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வந்த சுஷாந்த் சிங் ராஜ்புட் ஜூன் 14ம் தேதி மும்பை பாந்த்ராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். நடிகர் சுஷாந்த் உயிரிழந்து ஒன்றரை மாதம் ஆன நிலையில் தற்போது அவரின் தந்தை கே.கே.சிங், சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக ரியா சக்ரபர்த்தி மீது புகார் கூறியிருந்தார். இதையடுத்து தற்கொலைக்கு உதவுதல், தவறாக வழிநடத்துதல், தவறான கட்டுப்பாடு, வீட்டில் திருட்டு, மோசடி, கிரிமினல், நம்பிக்கையை மீறிய செயல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பீகார் போலீசார் தீவிர விசாரணையை தொடங்கினர்.
இதையும் படிங்க: படுக்கையில் ஆண் நண்பருடன் அமலா பால்... பீர் பாட்டிலுடன் பார்ட்டி கொண்டாட்டம்... சர்ச்சையை கிளப்பும் போட்டோஸ்!
மேலும் அந்த புகாரில் ரியா தன் மகனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.15 கோடி வரை மாற்றியுள்ளதாகவும், கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டியிருந்தார். மொத்தமாக சுமார் 50 கோடி வரை ரியா சக்ரபர்த்தி மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு இன்று ஆஜராகும் படி ரியா சக்ரபர்த்திக்கு நேற்று அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. இன்று காலை 11.30 மணி அளவில் மும்பையில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராக வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: விஜய் மனைவியை வரம்பு மீறி அசிங்கப்படுத்திய மீரா மிதுன்... ஒத்த ட்வீட்டில் தெறிக்க விட்ட சகோதரர்...!
தன்னை பாட்னா போலீசார் விசாரிக்க கூடாது என ரியா சக்ரபர்த்தி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ரியா சக்ரபர்த்தியை கைது செய்ய இருந்த தடை நீங்கியதால் அவர் தலைமறைவானதாக கூறப்பட்டது. இதையடுத்து பணமோசடி புகாரில் சிக்கிய ரியா சக்ரபர்த்தி இன்று தனது தம்பி செளவிக் சக்ரபத்தியுடன் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜரானார். முகத்தில் மாஸ்க் அணிந்த படி ரியா சக்ரபர்த்தி விசாரணைக்கு வந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.