சூர்யாவின் கங்குவா படத்தின் ஒரு Glimpse காட்சி ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது அந்த படத்தின் First Look போஸ்டர் வெளியாகியுள்ளது.
கங்குவா படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் First Look போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் கேள்விபடாத ஒரு பெயரைக் கொண்டு சிறுத்தை சிவா இயக்கியுள்ள திரைப்படம் தான் கங்குவா. இந்த செல்லின் பொருள் நெருப்பிலிருந்து பிறந்தவன் என்பது தான், கங்கா எனப்படும் கங்குவா.
A warrior. A leader. A King!🦅
Presenting you the
▶️https://t.co/REvjXHt1cS pic.twitter.com/MAPs7prTbw
சில நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தின் பல இடங்களில் சிறுசிறு இன கூட்டங்கள் பெரிய அளவில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு இடையே பலவிதமான போர்களும் இந்த வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ளது. அந்த வகையில் சில பூர்வக்குடி மக்களின் கதைகளை ஒன்றிணைத்து கங்குவா திரைப்படம் உருவாகி வருவதாக சில தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.
சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் இருவர் பலி
மிகப் பெரிய பொருட் செலவில் கொடைக்கானல் உள்ளிட்ட பல முக்கிய இடங்களில் பெரிய அளவிலான அரங்கங்கள் அமைக்கப்பட்டு கங்குவா படத்தின் படபிடிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இரவு 12 மணிக்கு சூரியா அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தில் இருந்து ஒரு காட்சி வெளியானது.
அதை தொடர்ந்து சூர்யாவின் ரசிகர்களுக்கு இரண்டாவது ட்ரீட்டாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்று வருகிறது.