இந்திய அரசின் தகவல் ஆணையர் பதவியில் உள்ள உதய் மஹுர்கர், பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் நோலனுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவருடைய 'ஓப்பன்ஹைமர்' படத்தில் வரும் ஒரு காட்சி, ஒட்டுமொத்த ஹிந்து மதத்தை அவமதிப்பதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘ஓப்பன்ஹைமர்’ படத்தில், நடிகர் சில்லியன் மர்பி முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடைய பெயர் தான் ராபர்ட் ஓப்பன்ஹைமர். இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் அவர் சில சம்ஸ்கிருத வசனங்களை பேசி அதன் பிறகு உடலுறவு கொள்வதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அது கீதையில் வரும் வசனங்கள் என்றும், இது ஹிந்து மதத்தை புண்படுத்தும் வண்ணம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் கோட்பாட்டு இயற்பியலாளர் ஒருவரின் கதையை தழுவி எடுக்கப்பட்டுள்ள ஓப்பன்ஹைமர் திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை ஆண்டு இந்தியாவில் வெளியானது, சுமார் 180 நிமிட நீளமுள்ள இந்த படம் இரண்டு நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 30 கோடிக்கு மேல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தான் இந்திய அரசின் தகவல் ஆணையர் உதய் மஹுர்கர், நோலனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த காட்சி "இந்து மதத்தின் மீதான தாக்குதல்" என்று குறிப்பிட்டு, உலகளவில் இந்த காட்சியை நீக்க வேண்டும் என்று இயக்குனரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்லாயிரக்கணக்கான இந்துக்கள் மற்றும் காலத்தால் அழியாத பாரம்பரியத்தின் சார்பாக, அவர்களின் மதிப்பிற்குரிய புத்தகத்தின் கண்ணியத்தை நிலைநிறுத்தவும், உலகம் முழுவதும் உங்கள் திரைப்படத்திலிருந்து இந்தக் காட்சியை அகற்றவும் தேவையான அனைத்தையும் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்றும் அவரு கூறியுள்ளார்.
மேலும் இந்த முறையீட்டைப் புறக்கணிக்க நீங்கள் விரும்பினால், அது இந்திய நாகரிகத்தின் மீதான திட்டமிட்ட தாக்குதலாகக் கருதப்படும். தேவையான நடவடிக்கைக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் (sic)” என்று சேவ் கல்ச்சர் சேவ் இந்தியா அறக்கட்டளையின் நிறுவனர் மஹூர்கர் கூறியுள்ளார். ‘அணுகுண்டின் தந்தை’ என்று கருதப்படும் ஜே. ராபர்ட் ஓப்பன்ஹைமர், சமஸ்கிருதம் கற்றவர், மேலும் அவர் பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில், நோலனின் இந்த படம் R சான்றிதழ் பெற்றுள்ளது, அதாவது Restricted’ என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே 17 வயதிற்குட்பட்ட பார்வையாளர்கள் பெற்றோர் அல்லது வயது வந்த பாதுகாவலருடன் சென்று தான் பார்க்கவேண்டும். இது நோலனின் முதல் R ரேட்டிங் பெற்ற படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மஹூர்கர் தனது பதிவில், "இந்தக் காட்சியுடன் வெளியான இந்த திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் (CBFC) எவ்வாறு ஒப்புதல் அளிக்க முடியும் என்பதில் குழப்பமாக உள்ளேன்" என்று கூறியுள்ளார். CBFC தலைவர் பிரசூன் ஜோஷி மற்றும் தணிக்கைக் குழுவின் மற்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டபோது அவர்களிடமிருந்து உடனடியாக எந்த பதிலும் இல்லை என்றும் அவர் கூறினார்.
சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் இருவர் பலி