
பிரபல இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுதா கோங்கரா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். 2010-ம் ஆண்டு துரோகி என்ற ஆக்ஷன் படத்தின் மூலம் இயக்குனரான அவர் முதல் படத்திலேயே கவனம் பெற்றார். இதை தொடர்ந்து 2016-ம் ஆண்டு இறுதி சுற்று படத்தை இயக்கி இருந்தார் சுதா கொங்கரா. மாதவன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து 2020-ம் ஆண்டு சூர்யாவை வைத்து சூரரைப் போற்று என்ற பயோ பிக் படத்தை இயக்கினார். அதே ஆண்டில் பாவக்கதைகள் என்ற ஆந்தாலஜி படத்தில் தங்கம் என்ற பகுதியையும், புத்தம் புது காலை என்ற ஆந்தாலஜியில் இளமை இதோ இதோ என்ற பகுதியையும் இயக்கினார். கிட்டத்தட்ட 4 வருட இடைவெளிக்குப் பிறகு, சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா என்ற படத்தை இயக்கி உள்ளார்.
இந்த நிலையில் ஆயுத எழுத்து, சூரரை போற்று ஆகிய இரண்டு படங்களிலும் சூர்யாவுடன் பணிபுரிந்த அனுபவம் குறித்து சுதா கோங்கரா பகிர்ந்து கொண்டார். அப்போது பேசிய அவர் “சூர்யா அமைதியாக உட்கார்ந்திருப்பது போல் தான் தெரியும். அவருடைய செயல்முறையை நான் பார்த்திருக்கிறேன், இருப்பினும் இதைப் பகிர வேண்டுமா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஒரு சுவரின் அருகே நின்று தனது டயலாக்களை சொல்வதை நான் பார்த்திருக்கிறேன். அவர் தொடர்ந்து தயாராகி வருகிறார். அதிக டேக்களை முயற்சி செய்தால் சிறப்பாக நடிக்க முடியும் என்று அவர் கருதுகிறார். ஆனால் எனக்கு அப்படித் தோன்றவில்லை, அவர் நன்றாக நடித்தாலும் மேலும் ஒரு டேக் கேட்பார்.” என்று தெரிவித்தார்.
ஆயுத எழுத்து படப்பிடிப்பில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த கொங்கரா, “ நான் ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தேன். கதவை தட்டும் சத்தம் கேட்ட உடன் அவர் கதவை திறக்க வேண்டும். அந்த ஷாட்டை எடுக்க அவர் 26 டேக்களை எடுத்தார். மணி சார் கூட ஒருக்கட்டத்தில் டேக்கை ஓகே சொல்லிவிட்டார். ஆனால் சூர்யா கேட்கவில்லை. இந்த கேரக்டருக்கு இது நல்லா இருக்கும் என்று கூறி தொடர்ந்து டேக் எடுத்துக் கொண்டிருந்தார்.
மீண்டும் மீண்டுமா? 4-வது திருமணத்தை கன்ஃபார்ம் செய்த வனிதா விஜயகுமார்? தீயாக பரவும் தகவல்..
இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று கூறி அவர் 26 டேக்குகள் எடுத்தார். அவருடன் பணியாற்றுவது மகிழ்ச்சி அளிக்கிறது. சூர்யா எப்போதுமே ‘இது போதும்’ என்று உங்களிடம் சொல்ல மாட்டார். சொல்லப் போனால், ‘இல்லை சூர்யா, நீ சிறப்பாக செய்துவிட்டாய் என்று நான் அவரிடம் கூறினாலும் அவர் ஒருபோதும் தனது முயற்சியை கைவிடமாட்டார். சூர்யாவின் அந்த குணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.” என்று கூறினார்.
ஏர் டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து சுதா கோங்கரா இயக்கிய படம் தான் சூரரைப் போற்று. நேரடியாக ஓடிடியில் வெளியான இந்த படம் மாபெரும் வரவேற்பை பெற்றதுடன், தேசிய விருதுகளையும் வென்றது. சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை உட்பட 5 தேசிய விருதுகளை வென்றது. எனினும் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா கலவையான விமர்சனங்களை பெற்றதுடன், பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் செய்ய திணறி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.