Urfi Javed: தலைக்கேறிய போதை... நிற்க முடியாமல் தள்ளாடிய சர்ச்சை நாயகி உர்ஃபி ஜாவேத்! வைரல் வீடியோ!

Published : Jul 17, 2024, 02:22 PM IST
Urfi Javed: தலைக்கேறிய போதை... நிற்க முடியாமல் தள்ளாடிய சர்ச்சை நாயகி உர்ஃபி ஜாவேத்! வைரல் வீடியோ!

சுருக்கம்

நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான உர்ஃபி ஜாவேத் தன்னுடைய நண்பர்களுடன் குடிபோதையில், பப்பில் இருந்து வெளியேறிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  


பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை உர்ஃபி ஜாவேத். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, முதல் வாரத்திலேயே வெளியேற்றப்பட்ட நிலையில்...  எப்படியும் ரசிகர்கள் மத்தியில் தன்னை வித்தியாசமாக காட்டிக்கொள்ள வேண்டும் என நினைத்த உர்ஃபி, விதவிதமான உடைகளை அணிந்து அனைவரையும் வியக்க வைத்து வருகிறார்.

இவரின் ட்ரெஸ்ஸிங் ஸ்டைல் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாவது உண்டு. அதே போல் பல உடைகள், காமெடியாகவும் இருக்கும், ஆனால் தன்னை பற்றிய விமர்சனங்களை சற்றும் கண்டு கொள்ளாத உர்ஃபி, சகட்டு மேனிக்கு கவர்ச்சியை வாரி இறைக்கும் உடையில்.. மும்பையில் வலம் வருகிறார். 

45 வயதில் விஜய் சேதுபதியுடன் கியூட் ரொமான்ஸ்! விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் வெளியானது!

உர்ஃபி ஜாவேத்துக்கு, தற்போது வரை இவர் எதிர்பார்க்கும் படியான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தொலைக்காட்சி சீரியல் மூலம் பிரபலமானவர். அந்த வகையில் இவர் 2016ல் ஒளிபரப்பான படே பய்யா கி துல்ஹனியா என்ற தொடரில் அவ்னி பந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.  பின்னர் சந்திரா நந்ஹினி, சாத் ஃபேரோ கி ஹீரா ஃபேரி, பெப்பன்னா, ஜிஜி மா, ஆயி மேரே ஹம்சஃபர் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

அய்யோ இவரா.. வயிற்றில் உள்ள கருவையே கலைத்தவர்! நெப்போலியன் பற்றி அவர் மனைவி கூறிய புகார்! பின் நடந்த திருமணம்!

இந்நிலையில் இவர் இந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை தன்னுடைய நண்பர்களுடன், பப்புக்கு வந்து தலைக்கேறிய குடிபோதையில் நடக்க முடியாமல் சிரமப்பட்ட வீடியோஸ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. குடிபோதையில் உர்ஃபி நிற்க கூட முடியாமல் தடுமாறும் நிலையில் அவரை அவரின் தோழிகள் தான் கைத்தாங்கலாக பிடித்து செல்கின்றனர். இதற்க்கு உர்ஃபி  இப்படியெல்லாம் நடந்து கொள்ளாத நிலையில், இந்த மாதம் மட்டுமே இப்படி போதை ராணியாக மாறியுள்ளது ஏன் என, சமூக வலைதளத்தில் இவரை பின் தொடரும் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்