கங்குவா தோல்விக்கு பின் கம்பேக் கொடுத்தாரா சூர்யா? ரெட்ரோ விமர்சனம் இதோ

Published : May 01, 2025, 11:40 AM ISTUpdated : May 01, 2025, 11:43 AM IST
கங்குவா தோல்விக்கு பின் கம்பேக் கொடுத்தாரா சூர்யா? ரெட்ரோ விமர்சனம் இதோ

சுருக்கம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா,பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தையும், ரசிகர்கள் அளித்த ரேட்டிங்கையும் இங்கே பார்க்கலாம்.

Suriya - Karthik Subbaraj Retro Film? Twitter Review and Ratings : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்துள்ள படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், நாசர், சிங்கம்புலி, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை 2டி நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்து உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார்.

ரெட்ரோ ட்விட்டர் விமர்சனம்

ரெட்ரோ திரைப்படம் உலகமெங்கும் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளிவந்த கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்ததால், இப்படத்தின் வெற்றியை மலைபோல் நம்பி உள்ளார் சூர்யா. ரெட்ரோ படம் மூலம் சூர்யா கம்பேக் கொடுத்துள்ளாரா என்பதை படம் பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனம் மூலம் கூறி வருகின்றனர். அதன்படி ரெட்ரோ படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ரெட்ரோ படத்தின் முதல் பாதி நன்றாக உள்ளது. குறிப்பாக முதல் 30 நிமிட திரைக்கதை வேறலெவல். சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட கன்னிமா பாடல் படத்தை தூக்கி நிறுத்துகிறது. இண்டர்வெல் சீன் வெறித்தனமாக உள்ளது. சூர்யா - பூஜா ஹெக்டே ஜோடி மனதை கொள்ளைகொள்கிறார்கள். கண்ணாடி பூவே பாடல் திரையில் சூப்பராக உள்ளது. ஜோஜு ஜார்ஜுக்கு தரமான கேரக்டர். காதலும், காமெடியும் முடிந்தது, அடுத்தது ஆக்‌ஷன் தான் என பதிவிட்டுள்ளார்.

ரெட்ரோ முதல் பாதி கார்த்திக் சுப்புராஜ் ஸ்டைலில் விறுவிறுப்பாகவும், கலகலப்பாகவும் நகர்கிறது. சமீப காலத்தில் சூர்யாவின் பெஸ்ட் வெர்ஷனை இந்த படத்தில் பார்க்கலாம். ரொமான்ஸ், ஆக்‌ஷன் என அனைத்திலும் பின்னிபெடலெடுத்துள்ளார். சிங்கிள் ஷாட் காட்சி நன்றாக எடுக்கப்பட்டு உள்ளது. ஆக்‌ஷன் காட்சிகளும் சூப்பர், ஆனால் காதல் காட்சிகள் வேறலெவல். சந்தோஷ் நாராயணனின் பின்னணி இசை தெறிக்கிறது. டல் இல்லாமல் நகர்கிறது என குறிப்பிட்டுள்ளார்.

ரெட்ரோ படத்தின் முதல் பாதியில் கன்னிமா பாடல் மற்றும் 15 நிமிட சிங்கிள் ஷாட் காட்சி வேறலெவலில் உள்ளது. டான்ஸ், ஆக்‌ஷன் மற்றும் எமோஷன் என அனைத்தும் அருமை. சூர்யா வழக்கம்போல மாஸ் காட்டி உள்ளார். இண்டர்வெல் காட்சி தனித்துவமாக உள்ளது. சூர்யா - பூஜா ஹெக்டே ஜோடி மனதை கொள்ளைகொள்கின்றனர். பாடல்கள் திரையிலும் ஜொலிக்கிறது. படத்தின் கதாபாத்திர தேர்வு அருமை என குறிப்பிட்டுள்ளார்.

ரெட்ரோ முதல் பாதியில் கன்னிமா படம் அதகளமாக உள்ளது. காதல் காட்சிகள் மெதுவாக நகர்ந்தாலும் டல் அடிக்கவில்லை. சூர்யா மற்றும் பூஜா ஹெக்டேவின் நடிப்பு அருமை. ஜெயராமின் காமெடி காட்சிகள் ஒர்க் அவுட் ஆகி உள்ளன. அருமையான முதல் பாதி. ஆக்‌ஷன் காட்சிகளில் அனல்பறக்க நடித்துள்ளார் சூர்யா. சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை வேறலெவல் என பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்