
பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக மே 4, 5 தேதிகளில் இங்கிலாந்தில் நடைபெறவிருந்த சல்மான் கானின் 'தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சல்மான் கானை தவிர, மதுரி தீட்சித், வருண் தவான், டைகர் ஷெராஃப், க்ரித்தி சனோன், திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்க இருந்தனர்.
இதுகுறித்து சல்மான் கான் கூறும் போது, "இந்த துயரமான சமயத்தில் இதுபோன்ற ஆடம்பர நிகழ்ச்சியை ஒத்திவைப்பதுதான் சரியானது என்று சல்மான் தெரிவித்துள்ளார்.அதே போல் நிகழ்ச்சியின் புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் சாரா அலி கான், டைகர் ஷெராஃப், வருண் தவான், மதுரி தீட்சித், க்ரித்தி சனோன், திஷா பதானி, சுனில் க்ரோவர், மனீஷ் பால் உள்ளிட்டோர் இடம்பெற்ற 'தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சியின் விளம்பரப் படம் ஒன்றையும் சல்மான் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மளமளவென சரிந்த வசூல்; தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் சிக்கந்தர்!
விளம்பரப் படத்தின் மேல் 'ஒத்திவைக்கப்பட்டது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. "காஷ்மீர் பஹல்காம் தாக்குதல் காரணமாக, மே 4, 5 தேதிகளில் மான்செஸ்டர் மற்றும் லண்டனில் நடைபெறவிருந்த 'தி பிக் பாலிவுட் ஒன்' நிகழ்ச்சியை ஒத்தி வைத்ததற்கு பலர் வரவேற்று வருகிறார்கள். அதே சமயம் "இந்த நிகழ்ச்சிக்காக எங்கள் ரசிகர்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருந்தார்கள் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இருப்பினும், இந்த துயரமான சமயத்தில் நிகழ்ச்சியைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதுதான் சரியானது என்று சல்மான் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
"நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதால் ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். உங்கள் புரிதலுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. நிகழ்ச்சியின் புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்." என்று இன்று இந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.