காட்டுத்தனமாக ஹிட்டடித்த “காட்டுப்பயலே” பாடல்... ஒரே வாரத்தில் இத்தனை மில்லியன் பார்வையாளர்களா?

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jul 31, 2020, 07:08 PM IST
காட்டுத்தனமாக ஹிட்டடித்த  “காட்டுப்பயலே” பாடல்... ஒரே வாரத்தில் இத்தனை மில்லியன் பார்வையாளர்களா?

சுருக்கம்

சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, “காட்டு பயலே” பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தனர். 

“இறுதிச்சுற்று” படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் , “சூரரைப்போற்று”. இந்தியாவின் முதல் பட்ஜெட் விமானத்தை உருவாக்கிய ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் அபர்ணா பாலமுரளி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு, கருணாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இதையும் படிங்க: கமல், விஜய், சூர்யா, சிம்பு குடும்பத்தை பற்றி மீரா மிதுன் கண்டுபிடித்த ரகசியம்... கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்!!

கொரோனா பிரச்சனையால் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டிருந்தாலும், போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால்  “சூரரைப்போற்று” படத்தில் சொச்சம், மிச்சம் இருந்த அந்த பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் கொடுக்கப்பட்டதை அடுத்து, ஓடிடி தளத்தில் 55 கோடி ரூபாய் வரை கொடுத்த படத்தை வாங்க தயாராக உள்ளனர். 

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும், சிக்யா நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் நிலையில், ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

 

இதையும் படிங்க: ராஜமாதா கெட்டப்பில் வனிதா... தீயாய் பரவும் போட்டோவை பார்த்து கண்டபடி கலாய்க்கும் நெட்டிசன்கள்...!

 சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, “காட்டு பயலே” பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தனர். இந்த பாடல் வெளியாகி இன்றுடன் ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில், யூ-டியூப்பில் தாறுமாறாக ஹிட்டடித்துள்ளது. அதாவது இந்த பாடலை இதுவரை 5 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளனர். இதனை சூர்யா ரசிகர்கள் ட்விட்டரில் தாறுமாறாக ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?