
திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் என தமிழ் சினிமாவில் பன் முகம் காட்டி வருபவர் பாலா. தமிழின் சிறந்த இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படும் பாலா வித்யாசமான கதைக்களம் மூலம் இன்றைய பல முன்னணி நடிகர்களை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தவர். "தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய பல கதைகளுக்கு சொந்தக்காரர் என்றே சொல்லலாம். இதுவரை 6 தேசிய விருதுகள், 13 மாநில விருதுகள், 15 ஃபிலிம்ஃபேர் விருதுகள், 14 சர்வதேச விழா விருதுகள் மற்றும் ஏராளமான பிறநாட்டு மாநில விருதுகளை வென்ற, பாலா தனது பட நாயகர்களை அவதாரம் எடுக்க வைத்து விடுவார். அதோடு மிகவும் கடினமான இயக்குனர் என்றும் பெயர் எடுத்தவர் பாலா.
தமிழ் திரையுலகிற்கு பாடலாசிரியராகாதான் அறிமுகமானார் பாலா. இயக்குநர் பாலுமகேந்திரா படத்தில் தான் முதல் முறையாக அறிமுகமானார். ஆரம்பத்தில் அவர் பாலு மகேந்திரா திரைப்படத்தில் தயாரிப்பு உதவியாளர் பின்னர் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். அப்போதைய சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருந்த பாலுமகேந்திராவிடம் பாடம் கற்ற பாலா 1999 இல் சேது படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முற்றுகள் படத்திலியேயே மாபெரும் வெற்றி கண்டார். அந்த படம் தான் விக்ரமுக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இந்த வெற்றியை அடுத்து அதே கடினமான பணியை கையாண்ட பாலா தனது நாயகர்களை வழக்கத்தை விட மிகவும் கடினமான அறிமுகப்படுத்திவதை வழக்கமாக கொண்டார்.
அந்த வரிசையில் நந்தா, பிதாமகன, நான் கடவுள், அவன் இவன், பரதேசி என தொடர்ந்து ஹிட்களை அள்ளிக் கொடுத்து இருந்தார் பாலா. ஆனால் இவரின் வாழ்வில் மிக சோதனையாக அமைந்தது இவர் இயக்கிய தாரை தப்பட்டை, நாச்சியார் போன்ற படங்கள் ரசிகர்களை பெரிதும் இருக்கவில்லை அதிலும் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பாலா இயக்கிய வர்மா படம் பாதியில் நிறுத்தப்பட்டது இவருக்கு பேரிடியாக இருந்தது.
அதோடு இவரால் வெற்றி கண்டா நாயகர்கள் மீண்டும் பாலா இயக்கத்தில் நடிக்க மறுத்ததும் இவரது தோல்விக்கு காரணம் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தோல்வி அவரது சொந்த வாழ்க்கை வரை பாதித்து. மேலும் பட தயாரிப்பால் பல கோடிகளையும் இழந்துவிட்டராம் பாலா. இதையடுத்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த பாலாவிற்கு ஆறுதலாக சூர்யா 41 படம் அமைந்தது.
ஏற்கனவே நந்தா, பிதாமகன் என இரு முறை பாலா இயக்கத்தில் சூர்யா நடித்திருந்தார். இந்த இரு படங்களும் சூர்யாவிற்கு திருப்பு முனையாக அமைந்தது. இதன் பொருட்டே 41 வது படத்தில் கமிட் ஆகியிருந்தார் சூர்யா. எதற்கும் துணிந்தவன் படத்தை அடுத்து வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் இவர் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாலாவுடன் கைகோர்த்தர். இதன் படப்பிடிப்பு கன்னியாகுமாரி, ராமேஸ்வரம் சுற்று வட்டாரத்தில் நநடைபெற்று வருகிறது.. அதோடு சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவனாக சூர்யா நடிப்பதாகவும் தகவல் கசிந்தது.
இந்நிலையில் சூர்யா 41 படப்பிடிப்பு தளத்தில் திடீரென பாலாவிற்கு -சூர்யாவிற்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது சூட்டிங்கின் போது திடீரென கடுப்பான பாலா நாயகன் சூர்யாவை கடுமையான வார்த்தைகளால் திட்டி விட்டாராம். அதனால் சூர்யா படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறியதால் சூட்டிங்க் தள்ளிப்போனதாக சொல்லப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.