Madhumitha baby shower: விரைவில் தாயாகும் பிக்பாஸ் புகழ் மதுமிதா...பகிர்ந்த கியூட்டான வளைகாப்பு வீடியோ..

Published : May 08, 2022, 10:58 AM IST
Madhumitha baby shower: விரைவில் தாயாகும் பிக்பாஸ் புகழ் மதுமிதா...பகிர்ந்த கியூட்டான வளைகாப்பு வீடியோ..

சுருக்கம்

Madhumitha baby shower: பிக்பாஸ் புகழ் மதுமிதா, திருமணத்திற்கு பிறகு கடந்த 3 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாகியுள்ளார். அவரின்  வளைகாப்பு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முதன் முதலில், லொள்ளு சபா, சின்ன பாப்பா பெரிய பாப்பா போன்ற நிகழ்ச்சிகளில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து தமிழ் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். இவரின் திறமையான நடிப்பால் சினிமா வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. 

மதுமிதா திருமணம்:

இதையடுத்து, ஒரு கல் ஒரு கண்ணாடி படம் மூலம் தமிழ் சினிமாவில், காமெடி நடிகையாக மதுமிதா எண்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் மூலம் இவருக்கு பாராட்டுக்கள் கிடைத்தது அத்துடன் ஜாங்கிரி மதுமிதா என்ற செல்ல பெயரும் வந்து சேர்ந்தது. 

இதையடுத்து, இவர் கடந்த 2019ம் ஆண்டு அவருடைய உறவினரான மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா:

திருமணத்திற்கு பிறகு படங்களில் கமிட்டாகி நடித்து வந்த மதுமிதா பிக்பாஸ் சீசன் 3 நிகச்சியில் 16 போட்டியாளர்களுடன் ஒருவராக கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் சந்தித்த இவர், தற்கொலை முயற்சி செய்துகொண்டு போட்டியைவிட்டு வெளியேறினார்.

வெளியே வந்த அவர், பத்திரிகையாளர் சந்திப்பில் வீட்டில் உள்ள பலரும் தன்னை மனரீதியாக தொல்லை கொடுத்ததால் தான் கையை கத்தியால் அறுத்துக்கொள்ள முயன்றதாக தெரிவித்தார். இந்த செய்தி காட்டு தீ போல் சமூக வலைத்தளங்களில் பரவியது. 

மதுமிதா வளைகாப்பு வீடியோ:

மேலும் படிக்க...Kajal Aggarwal Post: முதன்முறையாக மகனின் போட்டோவை பகிர்ந்த காஜல் அகர்வால்.. அன்னையர் தினத்தில் உருக்கம்..

இதையடுத்து, பொது நிகழ்ச்சிகள் எதிலும், கலந்து கொள்ளாமல் சரி வர பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மதுமிதா தற்போது திருமணத்திற்கு பிறகு கடந்த 3 ஆண்டுகள் கழித்து கர்ப்பமாகியுள்ளார்.

இதையடுத்து, தற்போது சீமந்தம் நடந்து முடிந்துள்ளது இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரம்யா கிருஷ்ணனை அசிங்கப்படுத்திய சத்யராஜ் மகள்..! தரையில் இறங்கி அடிப்பவர் தான் உண்மையான தலைவர் என பேச்சு
ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!