
பீகாரைச் சேர்ந்த 28 வயதாகும் இளம் பாடகி ஒருவருக்கு, பாட்னாவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பாட வருமாறு அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அந்த இடத்துக்கு சென்றபோது தான் அது போலியான அழைப்பு என தெரியவந்துள்ளது. பாட்னாவை சேர்ந்த பிண்டு குமார், சஞ்சீவ் குமார் மற்றும் கரு குமார் ஆகியோர் தான் பொய் சொல்லி அந்த பாடகியை வரவழைத்துள்ளனர்.
பின்னர் துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ள அந்த மூவரும், கல்யாண மண்டபத்தில் உள்ள அறையில் அந்த பாடகியை அடைத்து வைத்து கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் அதனை வீடியோவும் எடுத்துள்ளனர். பின்னர் நைசாக அவர்களிடம் இருந்து தப்பித்த அந்த பாடகி, அருகில் இருந்த அறையில் சென்று தாப்பாள் போட்டுக்கொண்டாராம்.
பின்னர் அங்கிருந்து போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அந்த மூன்று வாலிபர்களையும் கைது செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்துள்ளனர். விசாரணையில் அவர்கள் மூவரும் அந்த பெண்ணை கற்பழித்தது உறுதியானதை அடுத்து அவர்கள் மூவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... AK 61 Update : ஏ.கே.61-ல் அஜித்துக்கு ஜோடி நான் தான் - கன்பார்ம் பண்ணிய லேடிசூப்பர்ஸ்டார்... குஷியான ரசிகர்கள்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.