AR Rahman : ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published : May 08, 2022, 08:35 AM IST
AR Rahman : ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

சுருக்கம்

AR Rahman : ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதி கும்மிடிப்பூண்டியில் நடைபெற உள்ளது. 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் மூத்த மகள் கதீஜாவுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அவர் சவுண்ட் இன்ஜினியரான ரியாசுதீன் ஷேக் முகமது என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமணம் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் மிகவும் எளிமையாக நடைபெற்றது.

மகளின் திருமண புகைப்படத்தை ஏ.ஆர்.ரகுமான் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதைப் பார்த்த ரசிகர்கள், தங்களது வாழ்த்துக்களை புதுமணத் தம்பதிக்கு தெரிவித்து வந்தனர். இதுதவிர அவரது திருமணத்தில் எடுத்த புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திருமணமான தனது மகள் கதீஜா மற்றும் மருமகன் ரியாசுதீன் ஆகியோருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக சர்ப்ரைஸாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

ஏ.ஆர்.ரகுமானின் மனைவி, மகன் அமீன், மகள் ரஹீமா ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலினும், அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த சந்திப்பின் போது நடிகர் உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.

மேலும் வருகிற ஜூன் மாதம் 10-ந் தேதி ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி கும்மிடிப்பூண்டியில் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழையும் முதல்வரிடம் வழங்கினார் ஏ.ஆர்.ரகுமான். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Khatija Rahman : மகளின் திருமணத்தை எளிமையாக நடத்தி முடித்த ஏ.ஆர்.ரகுமான் - வைரலாகும் புகைப்படங்கள்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

இவ்வளவு நடந்தும் இன்னும் டிராமாவா: நான் மருமகள் தானே மன்னிக்க கூடாதா: கதறிய தங்கமயில்!
அடுத்த 1000 கோடி வசூலுக்கு ரெடியான ஷாருக்கான்... பட்டாசாய் வந்த ‘பதான் 2’ அப்டேட்