வாலி படத்தின் காட்சியை காப்பியடித்த சிவகார்த்திகேயன்.? டான் ட்ரைலரை கலாய்க்கும் நெட்டிசன்.. வைரல் வீடியோ..

Anija Kannan   | Asianet News
Published : May 07, 2022, 04:08 PM IST
வாலி படத்தின் காட்சியை காப்பியடித்த சிவகார்த்திகேயன்.? டான் ட்ரைலரை கலாய்க்கும் நெட்டிசன்.. வைரல் வீடியோ..

சுருக்கம்

Don Movie Trailer Trolled: எஸ்ஜே சூர்யா இயக்கிய வாலி படத்தில் வரும் ஒரு காட்சியை அப்படியே டான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் டாக்டர் படத்தை தொடர்ந்து, டான் படத்தில் நடித்துள்ளார். இது தவிர, இவரது நடிப்பில் இந்த ஆண்டு அயலான் மற்றும் மற்றும் எஸ்கே 20  உள்ளிட்ட இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.

இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இப்படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்தது ஏற்கனவே சிங்களாக ஜலபுல ஜங்கு  பே மற்றும் பிரைவேட் பார்ட்டி ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது.  

நட்சத்திர பட்டாளங்கள்:

இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் நாயகி பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிவகார்த்திகேயன் டான் திரைப்படம்:

இந்த படம் முன்னதாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ரிலீஸ் செய்யப்பட்ட இருந்தது. பின்னர் இதன் தேதி மாற்றப்பட்டு வரும் மாதம் 13ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த டான் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

ரிலீஸுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் டான் திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. தற்போது வரை இந்த படத்தின் டிரைலர் 6 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

ட்ரைலரில் சொன்ன கதை:

ட்ரைலரின் படி, கல்லூரியில் ரகளை செய்யும் மாணவராக தான் சிவகார்த்திகேயன் காட்டப்படுகிறார். மேலும் ஒரு காட்சியில் 'ஆசிரியர்களை டார்ச்சர் செய்வது எப்படி' என்கிற புத்தகத்தை சிவகார்த்திகேயன் கையில் வைத்து படித்துக் கொண்டிருப்பார். அந்த காட்சியை பார்த்து நெட்டிசன்கள் பலரும் சர்சை கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்த நிலையில், தற்போது மற்றுமொரு செய்தி வைரலாக பரவி வருகிறது. எஸ்ஜே சூர்யா இயக்கிய வாலி படத்தில் வரும் ஒரு காட்சியை அப்படியே டான் படத்தில் வைத்திருக்கின்றனர். 

வைரலாகும் வாலி பட காட்சி:

மருத்துவமனையில் ஒரு காட்சியில், அஜித், சிம்ரனை பார்த்து சிரித்துவிட்டு அதன் பின் எதுவும் தெரியாதது போல முகத்தை மாற்றிக்கொள்வார். அஜித்தை பார்த்து  'மாத்திட்டான் சார் மாத்திட்டான் சார்' என எஸ்ஜே சிம்ரன் கோபமாக கூறுவார். 

அந்த காட்சி தற்போது டான் படத்தில் காட்டப்பட்டுள்ளது. அதுவும் எஸ்ஜே சூர்யா உடனேயே இப்படி ஒரு காட்சி வைத்திருப்பது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 

மேலும் படிக்க....Kajal Aggarwal: குழந்தைக்கு தாயான பிறகும் குறையாத கவர்ச்சி...மாடர்ன் உடையில் ஹாட் கிளப்பும் காஜல் அகர்வால்...


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்: அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான தோல்வியை கொடுத்த படம்!
எந்தவித ஆரவாரமும் இல்லாமல் திரைக்கு வந்து ரசிகர்களால் கொண்டாடப்பட்ட டாப் 3 சிறந்த படங்கள்!