டயானா நயன்தாராவான கதை..லேடி சூப்பர் ஸ்டார் சினிமாவுக்கு வர இவர் தான் காரணமாம்!

Kanmani P   | Asianet News
Published : May 07, 2022, 02:05 PM IST
டயானா நயன்தாராவான கதை..லேடி சூப்பர் ஸ்டார் சினிமாவுக்கு வர இவர் தான் காரணமாம்!

சுருக்கம்

தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நயன்தாராவின் சினிமா பிரவேசம் குறித்து இயக்குனர்  சத்யன் அந்திக்காடு  பேட்டியளித்துள்ளார்.

திரைஉலகில் அசைக்கமுடியாத முன்னணி நாயகியாக இருப்பவர் நயன்தாரா. அவரை ரசிகர்கள் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கும் அளவிற்கு மாஸ் காட்டி வருகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பெண் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நயன்தாரா எந்த படத்தில் நடித்தாலும் அந்த படத்திற்கு ஒரு மாஸ் இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இவர் தமிழில் முன்னணி நாயகர்களுடன் நடித்திருந்தாலும் தன்னுடன் நடிக்கப்போவது அறிமுக நாயகனாக இருந்தால் கூட அந்த படத்தில் ஒப்பந்தம் ஆகி விடுவார். இவருடைய பெருந்தன்மையே திரை உலகில் தனி பெயரை பெற்றுக் கொடுத்தது. அதோட நயன்தாரா நடித்தால் ஹிட்டுதான் என்ற பெயரும் அவருக்கு உண்டு.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நாயகியாக திகழ்ந்து வருகிறார். நயன்தாராவுக்கு தெலுங்கில் தனி மார்க்கெட் உள்ளது. அங்கு முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகியிருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் ரசிகர்கள் மத்தியில் சக்கை போடு போட்டு வருகிறது. முன்னதாக அண்ணாத்தை படத்தில் ரஜினிக்கு ஜோடியாக வந்திருந்தார் நயன்தாரா.

அறிமுகமான சமயத்திலேயே சரத்குமார், சூப்பர் ஸ்டார் என மெகா ஸ்டார்களுடன் நடித்திருந்தார். புசுபுசுவென இருந்த இவர் பின்பு உடலை கட்டுடலாக மாற்றி இளசுகளை வசீகரித்து வருகிறார். நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவனுடன் காதலில் உள்ளார். இருவருக்கும் விரைவில் திருமணம் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நயன்தாரா சினிமா உலககிற்கு நுழைந்த கதையை பிரபல இயக்குனர் ஒருவர் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். கடந்த 20 வருடங்களாக  நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா முதல் முதலாக அறிமுகமானது மலையாளத்தில் தான். மலையாள திரைப்படமான 'மனசினக்கரே' என்ற படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.  இந்த படத்தை சத்தியன் அந்திக்காடு என்பவர் இயக்கியிருந்தார்.

அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் தனது பழைய ஞாபகங்களை கூறியுள்ளார். அதாவது மனசினக்கரே படத்தில் நடிப்பதற்காக புதுமுகங்களை தேடி வந்துள்ளனர். அந்த சமயத்தில் நயன்தாரா ஒரு நகைக்கடை விளம்பரத்தில் நடித்துள்ளார். அந்த புகைப்படத்தை பத்திரிகை ஒன்றில் பார்த்து விட்டு நயன்தாராவை தொடர்பு கொண்டுள்ளன.ர் ஆனால் அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம். ஆனாலும் நயன்தாராவின் பெற்றோர்கள் ஒப்புக் கொண்டதன் படி நயன்தாராவை இயக்குனர் உற்சாகமூட்டி 'டயானா' என்கிற பெயரை நயன்தாராவாக மாற்றி  சினிமாவில் அறிமுகம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!