
மக்களில் வரவேற்பை தொடர்ந்து படு பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். கடந்த 3 வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் முல்லை கதாபத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்து வந்தார்.
கதைக்களம்:
மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த சீரியல். குடும்பத்தின் ஒற்றுமை, அண்ணன் தம்பிகளின் பாசம் என விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. இந்த தொடரால் பல குடும்பங்கள் இணைந்துள்ளதாக தகவல் வெளியானது. இந்த தொடருக்கு விஜய் டெலிவிஷன் விருதும் கிடைத்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஆரம்பத்தில் விஜே சித்ரா, முல்லை கேரக்டரில் நடித்து வந்தார். அவருடைய மறைவிற்கு பிறகு முல்லை கேரக்டரில் காவியா அறிவுமணி நடித்து வருகிறார்.
கதை நகர்வு:
தற்போது, சீரியல் முல்லை முல்லை குழந்தை பெற்று கொள்ள போராடுவதை மையமாக கொண்டு, கதை நகர்கிறது. காரணம் அவர் குழந்தை பிறக்க லட்ச கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெற கடைசியில் அது தோல்வியில் முடிந்துள்ளது.
சீரியல் குறித்து வெளியான புதிய தகவல்:
தற்போது சீரியல் குறித்து ஒரு புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. காவ்யாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து அவர் விலக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
புதிய முல்லை இவரா ?
விரைவில் புதிய முல்லையாக ஆல்யா மானசா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் இன்னும் வெளியாகவில்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.