கே.ஜி.எப் 2- ல் எக்கசக்க மிஸ்டேக் இருக்கு.! புது புயலை கிளப்பும் விஜயின் தந்தை

Kanmani P   | Asianet News
Published : May 07, 2022, 01:08 PM IST
கே.ஜி.எப் 2- ல் எக்கசக்க மிஸ்டேக் இருக்கு.! புது புயலை கிளப்பும் விஜயின் தந்தை

சுருக்கம்

 லாஜிக் மிஸ்டேக்கை மறக்கடித்து, அனைவரையும் கைதட்ட வைத்தது கே.ஜி.எப் 2. திரைக்கதை என வெளிப்படையாக போட்டுடைத்துள்ளார் விஜயின் தந்தை எஸ்.ஏ சந்திரசேகர்.

கடந்த மாதம் டபுள் ட்ரீட் ஆக ரசிகர்களுக்கு அமைந்த படங்கள்தான் பீஸ்ட் மற்றும் கேஜிஎப் 2. விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருந்த பீஸ்ட் படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் ரசிகர்கள் மத்தியில் செம வெற்றியடைந்தது. அதோடு வெளியாவதற்கு முன்பே 100 கோடி ரூபாயை வசூலித்து பாக்ஸ் ஆபிஸிலும் வெற்றி கொண்டிருந்தது. இந்த படத்தில் தெலுங்கு நாயகி பூஜா ஹெக்டே , யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர், ஆக்ஷன், காமெடி,காதல்  என ஒருங்கிணைந்த கதையோடு வெளியாகிய விஜய்யின் இந்த படம்.கடந்த ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான பீஸ்ட் படம் ரசிகர்களிடம் முதல் நாள் நல்ல வரவேற்பை பெற்றது. குடும்பம் குடும்பமாக சென்று பார்க்க உகந்த படம் என ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இருந்தும் கதையில் சுவாரஸ்யம் இல்லை என நெட்டிசன்கள் விமர்சித்து வந்தனர். 

பீஸ்ட் வெளியான அடுத்த நாளே யாசின் கேஜிஎபும் வெளியானது. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி உலகெங்கும் மிகப்பிரம்மாண்டமாக 10 ஆயிரம் தியேட்டர்களில் கேஜிஎப் 2 வெளியாகியிருந்தது. முன்னதாக வெளியான கேஜிஎப் முதல் பாகம் இரண்டாம் பாகத்திற்கான விதையை ஏற்கனவே ரசிகர்கள் மனதில் விதைத்து விட்ட காரணத்தால் படம் குறித்த எதிர்பார்ப்பு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பான் இந்தியா மூவியாக வெளியான கே ஜி எஃப் தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் பாக்ஸ் ஆபிஸில் தூசி தட்டியது.

கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு மொத்த வசூல் ஆயிரம் கோடி இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இது அந்த படத்தின் பட்ஜெட்டை விட பல மடங்கு ஆகும். படம் முழுக்க ஆக்ஷன் துப்பாக்கி சத்தம், வெடி என அனல் பறக்கும் கதைக்களத்தை கொண்ட கேஜிஎப் 2 ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. அதோடு இதன் மூன்றாம் பாகம் குறித்த அறிவிப்பும் வெளியானது.

 இந்நிலையில் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ் ஏ சந்திரசேகர் கொடுத்துள்ள பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த பேட்டியில் செய்தியாளர்கள் நீங்கள் கேஜி எப் படம் பார்த்தீர்களா என கேட்கின்றனர். அதற்கு பதிலளிக்கும் எஸ் ஏ சந்திரசேகர் நான் இரு படங்களையும் பார்த்தேன். கேஜி எப் 2 -ல் நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கிறது. அந்த படத்தில் நாயகன் துப்பாக்கியுடன் பாராளுமன்றத்திற்குள் நுழைகிறார் அங்கு பிரதமர் முன்னிலையில் ஒரு அமைச்சரை சுட்டுக் கொள்கிறார். உண்மையில் ஒரு பாராளுமன்றத்திற்குள் நுழைய எத்தனை பாதுகாப்புகளை கடந்து சென்றிருக்க வேண்டும் இதை இயக்குனர் கூற மறந்து விட்டார். ஆனாலும் லாஜிக் மிஸ்டேக்குகளை கடந்து பெரிய கைதட்டல்களை பெறும் பெற்றுவிட்டது இந்தப் படம். படத்தின் கதை அம்சம் மிக அருமையாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!