
சின்னத்திரை சீரியலில் நடித்து பிரபலமானவர் சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஓட்டல் அறையில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டார். சித்ராவின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத், தற்போது ஜாமினில் வெளியே வந்துள்ளார். அவர் சமீபத்தில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி போலீஸில் பாதுகாப்பு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மேலும் சித்ரா மரணத்தில் முன்னாள் எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மற்றும் மாஃபியா கும்பலுக்கு தொடர்பு இருப்பதாக கூறி பகீர் கிளப்பினார். சித்ரா இறந்து ஓராண்டுக்கு மேல் ஆகும் நிலையில், ஹேம்நாத் வெளியிட்ட இந்த தகவலால், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில், சித்ராவின் தோழியும், சீரியல் நடிகையுமான ரேகா நாயர் சித்ரா தற்கொலை விவகாரம் தொடர்பாக பல்வேறு திடுக்கிடும் தகவல்களை சமீபத்திய பேட்டியில் கூறி உள்ளார். அதன்படி சித்ராவும், ஹேம்நாத்தும் தனியாக தங்கி இருந்த வீட்டிற்கு சென்றபோது அங்கு ஒரு டப்பா நிறைய காண்டம் இருந்ததைப் பார்த்து அதிச்சியடைந்ததாக கூறியுள்ளார் ரேகா.
மேலும் சித்ராவுக்கு முன்னாள் எம்.எல்.ஏ ஒருவருடன் தொடர்பு இருந்தது உண்மை தான் எனக் கூறியுள்ள அவர், சித்ராவுக்கு நிறைய கெட்ட பழக்கங்கள் இருந்ததாகவும், அவள் நல்லவ கிடையாது என்றும் கூறினார். சித்ராவின் உடலை முழுமையாக பிரேத பரிசோதனை செய்திருந்தால் எல்லாம் தெரிந்திருக்கும் என தெரிவித்துள்ளார் ரேகா. அவரின் இந்த குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
இதையும் படியுங்கள்... Nikki Galrani Marriage : கல்யாணத்துக்கு தயாரான காதல் ஜோடி... ஆதி-நிக்கி கல்ராணி ஜோடியின் திருமண தேதி அறிவிப்பு
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.