
கன்னட திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் மோகன் ஜுனேஜா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பிறமொழி படங்களிலும் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அண்மையில்; யாஷ் நடிப்பில் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் 2-ம் பாகத்திலும் சிறிய வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார் மோகன் ஜூனேஜா.
100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார். குறிப்பாக வடாரா என்கிற சீரியல் இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த மோகன் ஜூனேஜா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது திடீர் மறைவு கன்னட திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கு இன்று மாலை நடைபெற உள்ளது.
இதையும் படியுங்கள்...Nayanthara Marriage : திருமணத்திற்கு நாள் குறித்த நயன்தாரா... காதலனை கரம்பிடிக்கப்போவது இந்த தேதியில் தானாம்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.