
சிவகார்த்திகேயன் தற்போது டான், அயலான் மற்றும் மற்றும் எஸ்கே20 உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் நடித்து முடித்துள்ளார். இதில் டான் படத்தை சிபி சக்ரவர்த்தியின் இயக்கியுள்ளார். இவர் அட்லீயின் உதவி இயக்குனராக இருந்தவர். இதில் டாக்டர் நாயகி பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்திலிருந்து ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகியிருந்தது. மூன்றாவது சிங்களாக வெளியான பிரைவேட் பார்ட்டி என்னும் பாடல் அரபிக் குத்து ஸ்டைலில் உருவாகியிருந்தது. அதாவது, சிவகார்த்திகேயன் எழுதியுள்ள மூன்றாவது சிங்கிளை அரபிக் குத்து பாடலை பாடிய அனிரூத், ஜோனிடா காந்தி பாடியுள்ளனர்.
டான் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் வருகிற மே 13-ந் தேதி வெளியாகவுள்ளது. டான் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. ரிலீஸுக்கு கொஞ்ச நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் இதிலிருந்து ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.
ட்ரைலரின் படி சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக இருக்கிறார். அங்கு ஆசிரியருக்கு தொந்தரவு கொடுக்கும் லாஸ்ட் பெஞ்ச் மாணவர்களின் தலையாக இருக்கும் சிவகார்த்திகேயன் கடைசி வரை வாழ்வில் என்ன ஆவது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். மிகவும் குறும்பாக இருக்கும் இவரின் தந்தையாக வரும் சமுத்திரக்கனி மிகவும் கண்டிப்பான தந்தையாக வருகிறார்.
இதற்கிடையே பிரியா மோகனுடன் ஏற்படும் காதல் நன்பர்களுடன் கலாட்டா என இருக்கும் சிவாவிற்கு பேரிடியாக வருகிறார் எஸ்.ஜே சூர்யா ..இவரிடம் இருந்து எவ்வாறு நாயகன் தப்பி வாழ்வில் சாதிப்பார் என்பதே படத்தின் மைய கதையாக இருக்கும் என தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.