
பிரபல தொகுப்பாளினியும், சீரியல் நடிகையுமான சித்ரா கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தனியார் ஓட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலைக்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என பலரும் புகார் கூறி வந்தாலும், இன்றளவும் அவரது தற்கொலைக்கான உண்மை காரணம் வெளிவராமல் மர்மமாகவே உள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்த சித்ராவின் கணவர் ஹேம்நாத், அண்மையில் ஜாமினில் வெளியே வந்தார். வெளியே வந்ததும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு கொடுக்க கோரியும் போலீஸில் புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.
இந்நிலையில், ஹேம்நாத்துடன் 8 ஆண்டுகளாக நெருங்கிப் பழகிய அவரது நண்பர் ஒருவர், சமீபத்திய பேட்டியில், ஹேம்நாத்தை பற்றிய பல்வேறு திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது : சித்துவும் ஹேம்நாத்தும் ஒன்றாக வசித்த வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் காலி செய்து வேறு இடத்தில் வைத்துவிடுமாறு ஹேம்நாத்தின் தந்தை என்னிடம் கூறினார்.
அந்த வீட்டை காலி செய்தபோது கிடைத்த பொருட்களையெல்லாம் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன். அவனது வீட்டில் பண்டல் பண்டலாக ஆணுறைகள் இருந்தன. இதுதவிர கஞ்சா, போதை மாத்திரைகளெல்லாம் இருந்தன. சித்ராவை இவன் தான் கொலை செய்திருப்பான் என்கிற சந்தேகமும் எனக்கு உள்ளது. 8 வருஷம் பழகுன பாவத்துக்காக அவனுக்கு சில உதவிகள் செய்தேன். ஆனால் இப்போது என்மீதே அவன் புகார் கொடுத்துட்டான்” என ஹேம்நாத்தின் நண்பர் இமான் ஆதங்கத்துடன் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... VJ chitra : சித்ரா ஒன்னும் நல்லவ கிடையாது... டப்பா நிறைய காண்டம் இருந்துச்சு - பகீர் கிளப்பிய சித்ராவின் தோழி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.