Pavni: பிக் பாஸ் ஜோடிகள் முடிந்ததும் பாவனி- அமீர் கல்யாணமா? சேதி சொன்ன தொகுப்பாளினி பிரியங்கா! வைரல் வீடியோ...

By Anu Kan  |  First Published May 8, 2022, 12:00 PM IST

Pavni-Amir: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பாவனி, அமீர் இருவரும் பங்கேற்றுள்ளனர். 


விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்டு, அதிக சர்ச்சைகளை சந்தித்த போட்டியாளர்கள் என்றால் அது பாவனி தான். அமீர் உடன் இருவரின் முத்த சர்ச்சை பெறும் விவாதத்தை கிளப்பியது. இந்த சர்ச்சைகளை எல்லாம் கடந்து இறுதிப்போட்டி வரை முன்னேறி சென்ற பாவனி, 3-வது இடத்தை பிடித்து அசத்தினார்.

Latest Videos

undefined

சீரியல் நடிகை பவானி:

நடிகை பாவனி ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, பாசமலர், சின்னத்தம்பி போன்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர். சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணமான 3 மாதத்தில் பாவனியின் கணவர் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். அதிலிருந்து, மீண்டு வரும் பாவனி சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

அமீர் நடன இயக்குனராக சின்னத்திரையில் வலம் வருபவர். உங்களில் யார் அடுத்த பிரபு தேவா, கிங்ஸ் ஆப் டான்ஸ் போன்ற பிரபல நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலம் அடைந்தவர். 

அமீர் பாவனி காதல்:

தற்போது,  பாவனி, அமீருடன் காதலில் இருப்பதாக தகவல்கள் உலா வருகிறது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பின்னரும் அவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றி வருகின்றனர். இந்த ஜோடியின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆவது வழக்கம்.

 பாவனி, அமீர் திருமணம்:

இந்நிலையில், தற்போது பாவனி, அமீர் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அந்த ஷூட்டிங்கில் இருந்து தொகுப்பாளினி பிரியங்கா தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், பாவனி - அமீர் இருவரிடம் தொகுப்பாளினி பிரியங்கா  ‘நிகழ்ச்சி முடியும் போது கல்யாணமா’ என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பாவனி ‘இல்ல Friendship Band கட்ட போறேன்’ என பதில் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது..

மேலும் படிக்க...Madhumitha baby shower: விரைவில் தாயாகும் பிக்பாஸ் புகழ் மதுமிதா...பகிர்ந்த கியூட்டான வளைகாப்பு வீடியோ..

click me!