
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள திரைப்படம் பீஸ்ட். நெல்சன் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார்.
தமிழில் உருவான இப்படம் தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிட்டுள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியாகியுள்ள பீஸ்ட் திரைப்படம் அனைவரிடமும் அதிகளவில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
பீஸ்ட் வசூல்:
கொரோனா பரவலுக்கு பின் சென்னையில் வெளியான படங்களில் முதல் நாளில் அதிக வசூல் ஈட்டிய படமான பீஸ்ட் இடம் பிடித்துள்ளது. முன்னனதாக இந்த சாதனையை அஜித்தின் வலிமை பெற்றிருந்தது நிலையில், அது முறியடித்தது குறிப்பிடத்தக்கது.
பீஸ்ட்டை கலாய்க்கும் சூர்யா ரசிகர்கள்:
இந்நிலையில், நேற்று அஜித் ரசிகர்கள் பீஸ்ட்டை கலாய்த்து, பல்வேறு வீடியோக்களை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது சூர்யா ரசிகர்கள் பீஸ்ட் திரைப்படத்தின் ஓப்பனிங் காட்சி ஹாலிவுட் படத்தின் அப்பட்டமான காட்சி என்பதை கண்டுபிடித்துள்ளனர்
ஆம், பொது மக்கள் இருக்கும் இடத்தில் தாக்குகள் நடப்பது போல, விஜய்யும் பீஸ்ட் படத்தில் ஒரு குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருப்பார் என்பது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.