
இயக்குநர் பாலா, நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும், ''சூர்யா 41'' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களும் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. பாண்டிராஜ் இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் சமீபத்தில், வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்ப்பை பெற்று தந்தது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நல்ல படைத்தது.
இயக்குனர் பாலா-சூர்யா கூட்டணி:
இதையடுத்து, இயக்குனர் பாலா உடன் கூட்டணி அமைத்துள்ளார் சூர்யா. இப்படத்தை 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சூர்யாவும், ஜோதிகாவும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்.
இப்படம் மீனவர்களின் சந்திக்கும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட்:
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஏற்கனவே நந்தா, பிதாமகன் என 2 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
''சூர்யா 41'' படப்பிடிப்பில் சூர்யாவின் நெகிழ்ச்சி செயல்:
இதையடுத்து, இயக்குநர் பாலா, நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வரும், ''சூர்யா 41'' படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த படத்திற்கான செட் வேலைகள் துவங்கியுள்ளன. படத்திற்கு மூன்று வீடுகள் தேவை என்பதால், தனது கலை இயக்குனரிடம் செட் போடாமல் உண்மையான வீடுகளை கட்ட வேண்டும் என்று என சூர்யா கேட்டுள்ளார். படப்பிடிப்பு முடிந்தவுடன் வீடு இல்லாமல் இருக்கும் இருப்பவர்களுக்கு இந்த வீடுகளை கொடுக்க சூர்யா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.