Simbu and Anirudh: அனிருத் மற்றும் சிம்பு "தமிழால் இணைவோம்" என்று போட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிருத் மற்றும் சிம்பு "தமிழால் இணைவோம்" என்று போட்டுள்ள ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தி மொழி திணிப்பு சர்சை:
undefined
டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆங்கில மொழிக்கு மாற்றாக இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகத்தில் 70 விழுக்காடு அலுவல் பணிகள் ஹிந்தியில் மட்டுமே நடைபெறுவதாக தெரிவித்த அவர், அனைத்து மாநில மக்களும் உரையாடுவதற்கு பொது மொழியாக ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்திய மொழி ஒன்று இருக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
பல்வேறு தலைவர்கள் கண்டனம்:
அவரின் இந்தக் கருத்துகளுக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளனர். இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் பதிவு:
தமிழர் பிரச்சனை பலவற்றில் குரல் கொடுக்கும், ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்துக்கு, கீழே பாரதிதாசனின் ‘இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்' என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்தி மொழி சர்ச்சை எழுந்திருக்கும் இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சிம்பு மற்றும் அனிருத் பதிவு:
முன்னதாக, ஏ.ஆர்.ரகுமான் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தமிழ் தான் இணைப்பு மொழி என்று கூறியது மக்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில், தற்போது நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் "தமிழால் இணைவோம்" என்று ட்விட் செய்து ஏ.ஆர்.ரகுமானுக்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.