Kgf 2: கே.ஜி.எஃப் 2 படம், ஏப்ரல் 14-ம் தேதி, அதாவது நாளை உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதன் முன்னோட்டமாக, படத்தின் 3 -வது பாடலான ''சுல்தான்'' இன்று வெளியாகியுள்ளது.
கே.ஜி.எஃப் 2 படம், ஏப்ரல் 14-ம் தேதி, அதாவது நாளை உலகம் முழுவதும் மிகவும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதன் முன்னோட்டமாக, படத்தின் 3 -வது பாடலான ''சுல்தான்'' வெளியாகியுள்ளது.
கே.ஜி.எஃப் சேப்டர் 2' ரீலிஸ்:
பிரசாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் 'கே.ஜி.எஃப்1 படம் இந்திய அளவில் சூப்பர் டூப்பர் வெற்றி பெற்றது. இதன் அடுத்த பாகம் கே.ஜி.எஃப் சேப்டர் 2' என்ற பெயரில் தயாராகி ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதனால், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ப்ரீ புக்கிங் கலெக்சன்ஸ்:
இந்த படத்தில், யாஸ்சுடன் சேர்ந்து சஞ்சய் தத், ரவீனா டாண்டன் பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இன்று முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்திற்கு, டிக்கெட் முன்பதிவு படு வேகமாக நடைபெற்று வருகிறது.
படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்சன்ஸ் உலகம் முழுவதும் 56.6 கோடியை கடந்துள்ளதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன.
'கே.ஜி.எஃப்2' சுல்தான் பாடல்:
இதன், ட்ரைலர் மற்றும் படத்தின் 'தூப்பான்' மற்றும் அகிலம் நீ பாடல்கள் முன்னதாக வெளியான நிலையில், தற்போது படத்தின் 3 -வது பாடலான ''சுல்தான்'' வெளியாகியுள்ளது. 'கே.ஜி.எஃப்1 படம் இந்திய அளவில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள நிலையில், 'கே.ஜி.எஃப்2' படமும், அதே சாதனையை படைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.