Beast box office: அஜித், சூர்யா படங்களின் மொத்த வசூலை..ரிலீசுக்கு முன்பே முறியடித்த பீஸ்ட்! குஷியில் ரசிகர்கள்

Published : Apr 11, 2022, 04:15 PM IST
Beast box office: அஜித், சூர்யா படங்களின் மொத்த வசூலை..ரிலீசுக்கு முன்பே முறியடித்த பீஸ்ட்! குஷியில் ரசிகர்கள்

சுருக்கம்

Beast box office: நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகிறது. பீஸ்ட் படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது. 

நெல்சன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி உலகளவில் பிரம்மாண்டமான முறையில் வெளியாகிறது. பீஸ்ட் படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது. 

ரிலீஸ் அப்டேட்:

நெல்சன் இயக்கியுள்ள விஜய்யின் 65-வது படத்தை  பாடல்கள் மற்றும் பின்னணி இசையை அனிருத் கவனிக்க, பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படம் ஆக்‌ஷன், காமெடி, ரொமான்ஸ் நிறைந்த கமர்ஷியல் படமாக தயாராகி உள்ளது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாகவும், ஷான் டாம் சாக்கோ வில்லனாகவும் நடித்துள்ள்ளனர். மேலும்,  இப்படத்தில் யோகிபாபு, செல்வராகவன், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, சதீஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பீஸ்ட் படத்தின் முன்பதிவு:

பீஸ்ட் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் இப்படத்தின் அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன. தமிழ்நாடு, அதுமட்டுமின்றி சமீபத்தில் துவங்கிய பீஸ்ட் படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது. கேரளா போன்ற மாநிலங்களில் ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக புக்கிங் செய்து வருகிறார்கள்.

 முக்கிய இடத்தில் வசூல் வேட்டை:

பல நாடுகளில் பீஸ்ட் படத்திற்கு நல்ல முன்பதிவு நடந்து வருகிறது. அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தனவன்  படத்திற்கு கிடைத்த வரவேற்பை விட பீஸ்ட் படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை மற்றும் சூர்யாவின் நடிப்பில் வெளிவந்த எதற்கும் துணிந்தவன் இரு படங்களும் மொத்தம்  ரூ. 4 கோடி மட்டுமே வசூல் செய்திருந்தது.

இந்நிலையில், பீஸ்ட் திரைப்படத்திற்கு  கேரளா புக்கிங்கில் முதல் நாள் மட்டுமே ரூ. 4 கோடிக்கு மேல் வசூல் செய்து செய்துள்ளது. இதன் மூலம்,  விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் வலிமை மற்றும் எதற்கும் துணிந்தவன் படத்தின் முழு வசூலையும், புக்கிங்கில் வசூல் செய்து மாபெரும் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

மேலும் படிக்க....Actor vijay : பீஸ்ட் படக்குழுவுடன் ‘ரோல்ஸ் ராய்ஸ்’ காரில் ஜாலி ரைடு சென்ற விஜய் - வைரலாகும் வீடியோ


 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?
ரோகிணிக்குள் நுழைந்த ஆவி - அதிர்ச்சியில் மனோஜ்! 'சிறகடிக்க ஆசை' சீரியல் லேட்டஸ்ட் அப்டேட்!