Tamil songs hit: மொழி எல்லைகளை கடந்து வேர்ல்ட் லெவலில் ஹிட் அடித்த தமிழ் பாடல்கள் ...என்ன காரணம் தெரியுமா .?

By Anu Kan  |  First Published Apr 11, 2022, 2:48 PM IST

Tamil songs hit: சமீப காலமாக மொழி எல்லைகளை கடந்து, உலக அளவில் பல்வேறு தமிழ் பாடல்கள் ஹிட் அடித்து சாதனை படைத்தது வருகிறது.


மொழி எல்லைகளை கடந்து, உலக அளவில் தமிழ் பாடல்கள் ஹிட் அடித்து சாதனை படைத்தது வருகிறது.

உலக அளவில் ஒலிக்கும்  தமிழ் பாடல்கள்:

Tap to resize

Latest Videos

அரபிக் குத்து போன்ற வைரலான தமிழ் பாடல்களின் அர்த்தம் என்னவென்று தெரியாத போதும், கூட அமெரிக்கர்கள், ரஷ்யர்கள் உள்ளிட்ட பல நாட்டினரும் ரீல்ஸ் மூலமாக  ஆடி, பாடி அசத்துகின்றனர்.  இது போன்ற பாடல்கள் உலக அளவில் ஹிட் அடித்து வருகின்றனர். 

''ஒய் திஸ் கொலவெறி'' பாடல்:

இருப்பினும், உலக அளவில் ஹிட் ஆன முதல் தமிழ் பாடல் ''அரபிக் குத்து'' சாங் அல்ல. இதற்கு முன்பே '' 3'' படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில்,  தனுஷ் மற்றும் ஸுருதி நடிப்பில் வெளியான உருவான ''ஒய் திஸ் கொலவெறி'' பாடல் இன்று வரை 300 மில்லியன் பார்வையாளர்கள் கடந்து உலக அளவில் மெகாஹிட் அடித்தது.

அனிருத்தின் முதல் இசை பயணம்:

நடிகர் தனுஷ் இந்தப்பாடலை அவரே பாடி அவரே எழுதியிருந்தார். இந்த படத்தில் தான் அனிருத் முதன் முதலில், தனது இசை பயணத்தை துவங்கினார். இந்தப் பாடல்  யூ ட்யூப் தளத்தில் அதிகம் பேரால் பார்க்கப்பட்டு பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமடைந்து உலக அளவில் சாதனை படைத்தது. அன்று பெரும்பாலான நபர்களின் ரிங் டோன் எல்லாம் ஒய் திஸ் கொலவெறி மையமாக இருந்தது.

அனிருத், தனுஷ் காம்போ:

 

இதன்மூலம் . அனிருத், தனுஷ் காம்போ இந்திய அளவில் வேற லெவலில் கவனம் பெற்றது. இந்த ஹிட்டின் மூலம், நடிகர் தனுஷுக்கு இந்தி, ஹாலிவுட் பட வாய்ப்புகள் தேடி வந்தன. அனிருத்தும் பிரபலமடைந்தார். அதுமட்டுமின்றி, தனுஷ் பான் இந்தியா நாயகனாக வலம் வருகிறார். இப்போது,  அனிருத் மற்றும் தனுஷ் ஆகியோர் கூட்டணி சேராமல் வெவ்வேறு பாதையில் பயணித்து கொண்டிருக்கின்றனர். 

 'ரவுடி பேபி' பாடல்:

 

அதேபோன்று, இயக்குநர் பாலாஜிமோகன் - நடிகர் தனுஷ் கூட்டணியில் உருவான திரைப்படம்  மாரி 2  படத்தில் தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான 'ரவுடி பேபி' பாடல் மில்லியன் கணக்கில் பாடல் இடம்பெற்றிருந்தது. தற்போது, அந்த வரிசையில் விஜய்யின் ''அரபிக் குத்து'  பாடல் இணைந்துள்ளது.

'ஹலமதி அபிபு' பீவர்:

இந்த பாடல் வெளியானது முதலே,எல்லோரும்  'ஹலமதி அபிபு' பீவர் பிடித்து போய் இருக்கின்றனர். இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். உலக அளவில் ட்ரெண்டான இந்த பாடல் ஒரு மாதத்தில், 300 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது வருகிறது.  மேலும், இதன் மூலம் தமிழ் படங்களும் உலக அளவில் கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க ....Pranitha Subhash: குட் நியூஸ் சொன்ன சூர்யா, கார்த்தி பட ஹீரோயின்...கணவரின் பிறந்தநாளில் கிடைத்த வரம்...

click me!