Abirami: பிக் பாஸ் மேடையில் கதறி அழுத அபிராமி...சிம்பு சொன்ன விஷயம்...எதற்கு தெரியுமா?

Published : Apr 11, 2022, 03:26 PM IST
Abirami: பிக் பாஸ் மேடையில் கதறி அழுத அபிராமி...சிம்பு சொன்ன விஷயம்...எதற்கு தெரியுமா?

சுருக்கம்

Abirami: பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிசியில், அபிராமி தன்னுடைய தந்தையை பார்த்து, கதறி அழுத நிகழ்வு பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது. 

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிசியில், அபிராமி தன்னுடைய தந்தையை பார்த்து, கதறி அழுத நிகழ்வு பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது. பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது. பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாதது வழங்கப்பட்ட  பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்றுடன் முடிவடைந்தது. 

வெற்றி பெற்ற பாலா:

இதில், 14 போட்டியாளர்களுடன் 70 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில்,  பிக் பாஸ் பைனலுக்கு  6 போட்டியாளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகிய 4 போட்டியாளர்கள் இருக்கின்றனர்.

இதில் தாமரைச் செல்விக்கு 4-வது இடமும், ரம்யா பாண்டியனுக்கு 3-வது இடமும் கிடைத்தது. நிரூப் -2வது இடமும் கிடைத்தது. இதில் அதிக வாக்குகளை பெற்று வின்னராக பாலா அறிவிக்கப்பட்டுள்ளார்.  இதில், நேற்று நடைபெற்ற பைனலில் அபிராமியை மேடைக்கு அழைத்து சிம்பு பேசினார்.

சிம்பு செய்த நெகிழ்ச்சி செயல்:

அப்போது, 10 ஆண்டுகளுக்கு மேலாக அபிராமியின் குடும்பத்தை பிரிந்து வாழ்ந்த அவரது அப்பாவை சிம்பு மேடைக்கு அழைத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காமல் அபிராமி கண்ணீர் விட்டு கதறி அழுதார். இத்தனை காலம் குடும்பத்தை பிரிந்து இருந்த அப்பாவை எப்படி மிஸ் செய்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும் என அபிராமி உருக்கமாக பேசி கண்ணீர் விட்டார்.

கதறி அழுத அபிராமி:

அப்பா இல்லாமல் நான் அதிகம் கஷ்டப்பட்டு இருக்கிறேன். நன் துணிச்சலுடன் பல்வேறு விஷயங்களை கடந்து வந்திருக்கிறேன். ஆனால் அப்பா இல்லாததால் அதிகம் கஷ்டப்பட்டிருக்கிறேன். என்றார். 

அவரை தொடர்ந்து அபிராமியின் அம்மாவும் கண்ணீர் விட்டு பேசினார், கணவர் இல்லாமல் இரண்டு குழந்தைகளை மிகவும் சிரமமாக வளர்த்துள்ளேன். அந்த கஷ்டத்தை நான் பட்டிருக்கிறேன். அவர் திரும்பி வந்து ஒரு வாரம் தான் ஆகிறது. இனி மேலாவது  என் குழந்தைகளுக்கு அவரது பாசம் கிடைக்கும் என உருக்கமாக பேசியிருந்தார்.

மேலும் படிக்க....அல்டிமேட்னு சொல்லி ஆப்பு வச்சுட்டீங்களே பிக்பாஸ்... டைட்டில் ஜெயிச்ச பாலாவுக்கு இவ்வளவு தான் பரிசுத் தொகையா?

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Ethirneechal Thodargiradhu : மெமரி லாஸ் ஆன மாதிரி நடித்தாரா ஈஸ்வரி? எல்லா உண்மையையும் போட்டுடைத்த ஜனனி
Siragadikka Aasai : பிரியும் விஜயா - அண்ணாமலை; வீடு ஜப்தி செய்யப்படும் முன் நடுத்தெருவுக்கு வந்த குடும்பம்