Bigg Boss Ultimate: தாமரை, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முடித்த கையோடு தனது மாமியாரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
தாமரை, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முடித்த கையோடு தனது மாமியாரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் நம்பர் 1 தொலைக்காட்சி நிகழ்ச்சியாக உள்ளது.
பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சமில்லாமல், வழங்கப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் கலந்து கொண்ட தாமரைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தாமரை:
இதையடுத்து, OTTயில் பிரத்தேகமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தாமரையுடன் சேர்த்து 14 போட்டியாளர்களுடன் துவங்கப்பபட்டது. 70 நாட்கள் மட்டுமே நடத்தப்படும் இந்த நிகழ்ச்சியில், பிக் பாஸ் பைனலுக்கு 6 போட்டியாளர்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின், இறுதி வாரத்தில் தாமரை, ரம்யா பாண்டியன், நிரூப், பாலா ஆகிய 4 போட்டியாளர்கள் இருந்தனர்.
பிக்பாஸ் அல்டிமேட் 4-வது இடம் பிடித்த தாமரை:
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் தாமரை ஜெயிக்கும் வாய்ப்பு இருப்பதாக மக்கள் நினைத்தார்கள், ஆனால், தாமரைச் செல்விக்கு 4-வது இடமும், ரம்யா பாண்டியனுக்கு 3-வது இடமும் கிடைத்தது. நிரூப் -2வது இடமும் கிடைத்தது. இதில் கடுமையாக விளையாடி பாலாஜி அதிக வாக்குகளை பெற்று வின்னராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தாமரை:
தாமரை பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போதே, தனது மாமியாரை பற்றி பெருமையாக பேசியிருந்தார். தாமரைக்கு தனது குடும்பம், கலை இரண்டுமே இரண்டு கண்கள் என்று அடிக்கடி கூறுவார். இந்நிலையில், பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை முடித்த கையோடு தனது மாமியாரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுள்ளார். தற்போது அந்த புகைப்படம் பார்த்து நெட்டிசன்கள் இவ்வளவு அழகான மாமாமியார், மருமகளா என்று புகழ்ந்து வருகின்றனர்.