நடிகர் சூர்யா தன்னுடைய 44-வது படத்தை, யார் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இருக்கும் சூர்யா தொடர்ந்து வித்யாசமான கதைகளத்தில் உருவாகும் திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில், ஃபேண்டஸி கதையம் சத்துடன் வரலாற்று படமாக உருவாகி உள்ள, 'கங்குவா' படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இப்படத்தின் போஸ் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் ட்ரைலர், ஆடியோ லான்ச், படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க, சூர்யா தன்னுடைய அடுத்த படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள 'புறநானூறு' படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு சில காரணங்களால் இப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகி வரும் நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் 'வாடிவாசல்' இணைவாரா என ரசிகர்கள் நினைத்தனர்.
ஆனால் வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தில் பிஸியாக இருப்பதால், அதிரடியாக நடிகர் சூர்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'பேட்டா' படத்தை இயக்கிய, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். சூர்யாவின் 44-ஆவது திரைப்படமாக உருவாகும் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, சற்று முன் வெளியானது. மேலும் இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளன. விரைவில் இப்படம் குறித்த மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
My Next Film is with the Ever-Awesome
sir 💥💥🤗
So Pumped up for this 👊👊 pic.twitter.com/DBLlRD9Reh