"குழந்தை இருந்தாலும் பரவாயில்ல.. நான் நடிகை மீனாவை கல்யாணம் செஞ்சுக்கிறேன்" - மீண்டும் புயலை கிளப்பிய பிரபலம்!

Ansgar R |  
Published : Mar 28, 2024, 02:21 PM ISTUpdated : Mar 28, 2024, 02:33 PM IST
"குழந்தை இருந்தாலும் பரவாயில்ல.. நான் நடிகை மீனாவை கல்யாணம் செஞ்சுக்கிறேன்" - மீண்டும் புயலை கிளப்பிய பிரபலம்!

சுருக்கம்

Actress Meena second marriage : தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின் கோலிவுட் உலகின் முன்னணி நாயகர்களோடு நடித்து மாபெரும் பெரும்புகழ் பெற்ற நடிகை தான் மீனா.

Actress Meena second marriage : கடந்த 1976 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகை மீனா, அவருக்கு ஆறு வயது இருக்கும் பொழுது திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். கடந்த 1982 ஆம் ஆண்டு பிரபல நடிகர் "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான "நெஞ்சங்கள்" என்கின்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார் மீனா. 

குழந்தை நட்சத்திரமாகவே பல மொழிகளில் 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த அவர், முதல் முதலில் தெலுங்கு திரை உலகிகள் தான் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழில் வெளியான "என் ராசாவின் மனசினிலே" என்கின்ற திரைப்படம் மீனாவுக்கு ஹீரோயினாக ஒரு நல்ல வரவேற்பை கொடுத்தது. சுமார் 40 ஆண்டு காலமாக இந்திய திரை உலகில் பல மொழிகளில் சிறந்த நடிகையாக விளங்கி வரும் மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 

Ilaiyaraaja Biopic : ஏ.ஆர்.ரகுமானாக சிம்பு.. இளையராஜா பயோபிக்கில் வைரமுத்துவாக நடிக்கப்போவது இந்த மாஸ் நடிகரா?

ஆனால் கடந்த 2022 ஆம் ஆண்டு உடல் நல குறைவு காரணமாக வித்தியாசாகர் மரணித்தது ஒட்டுமொத்த திரையுலகத்தையும், மீனா மீது பேரன்பு கொண்டிருந்த பலருக்கும் பேரிடியாக இருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் கூட ஒரு மேடையில் பேசும்பொழுது, யார் கண் பட்டதோ தெரியவில்லை, இந்த வயதில் மீனா தன் கணவரை இழந்திருப்பது பெரும் வருத்தத்தை கொடுக்கிறது என்று கூறியிருந்தார்.

இது ஒருபுறம் இருக்க, மீனாவின் கணவர் இறந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவர் மறுமணம் செய்ய தயாராகி வருவதாக பல செய்திகளை தொடர்ச்சியாக வெளிவந்தது. நடிகர் தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இந்த சர்ச்சையில் அடிபட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் எத்தனையோ மேடைகளில் தான் திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை, தன்னுடைய மகளே தனது உலகம் என்று கூறி மீனா அவர்கள் விளக்கம் கொடுத்து வந்தாலும், அவ்வப்பொழுது அவருடைய திருமணம் குறித்த சர்ச்சைகள் எழுந்து தான் வருகின்றது. 

இந்நிலையில் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் நடித்த "ஆராத்" என்கின்ற திரைப்படத்தின் சர்ச்சையான விமர்சனத்தால் சமூக வலைதளங்களில், பெரிதும் அறியப்பட்ட ஒருவர் தான் சந்தோஷ் வர்கீ. ஏற்கனவே பல நடிகைகள் குறித்து சர்ச்சையான வகையில் பேசி, நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கும் ஒரு நபர் இவர். 

இப்பொது நடிகை மீனா அவர்களை தான் திருமணம் செய்துகொள்ள தயார் என்றும், அவருக்கு ஒரு பெண் குழந்தைக்கு இருப்பது தனக்கு தெரியும், இருப்பினும் அதை பற்றி தனக்கு கலவை இல்லை என்று கூறியுள்ளார். அண்மையில் இந்த சந்தோஷ் நடிகை நித்யா மேனனை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறினார். 

ஏன் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனையும் தான் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக வீண் விளம்பரத்திற்காக தகாத முறையில் பேசி வந்த அவர் தற்பொழுது நடிகை மீனா பற்றி பேசி புயலை கிளப்பியுள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஒரு நடிகை, அதுவும் கணவனை இழந்து தனிமையில் வாழ்வது வருபவர் இப்படியா பேசுவது? இப்படி கேவலமான விஷயங்களை பேசி தான் உங்களது யூடியூப் சேனலுக்கு லீக்குகளை தேடிக் கொள்கிறீர்களா என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.

Arthika About Adjustment: பணத்துக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்யும் பெண்கள்! 'கார்த்திகை தீபம்' அர்த்திகா ஷாக் தகவல்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!