Amala Paul: கர்ப்பமாக இருக்கும் அமலா பால்... நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்! வைரலாகும் BTS வீடியோ!

Published : Mar 27, 2024, 10:23 PM IST
Amala Paul: கர்ப்பமாக இருக்கும் அமலா பால்... நீச்சல் குளம் அருகே நடத்திய போட்டோ ஷூட்! வைரலாகும் BTS வீடியோ!

சுருக்கம்

நடிகை அமலா பால் தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கும் நிலையில், இவரில் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

தமிழ் சினிமாவில், மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் அறிமுகமாகி, 'மைனா' படத்தின் மூலம் பல இளம் ரசிகர்களின் மனதை கட்டி போட்டவர் அமலா பால். இதை தொடர்ந்து, விஜய், ஆர்யா, ஜெயம் ரவி போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் அளவுக்கு உயர்ந்த அமலா பால், பிரபல தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பனின் மகனும், இயக்குனருமான ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இயக்குனர் விஜய் குடும்ப வழக்காடியும், நடிகை அமலா பால் வீட்டின் குடும்ப வழக்கப்படியும் இவர்கள் திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்தது. திருமணத்திற்கு பின்னர், இயக்குனர் ஏ.எல். விஜய் குடும்பத்தினர் கண்டிஷனுக்காக திரையுலகில் இருந்து விலகிய அமலா பாலுக்கு, 'பசங்க 2' மற்றும் 'அம்மா கணக்கு' போன்ற படங்களில் நடிக்க கிடைத்த வாய்ப்பு, மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையை தூண்டியது.

Harika And Aravish Wedding: சன் டிவி சீரியல் ஹீரோயினுடன்... சுந்தரி சீரியல் நடிகர் அரவிஷுக்கு டும் டும் டும்!

மேலும் அமலா பாலின் திரையுலக ஆசை... அவரது குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்க, அமலா பால் - ஏ.எல்.விஜய் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய முடிவு செய்தனர். விவாகரத்துக்கு பின்னர் ஏ.எல்.விஜய் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், குடும்பம் - குழந்தை என சந்தோஷமாகி வாழ்ந்து வருகிறார். ஆனால் அமலா பால் விவாகரத்துக்கு பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், கடந்த ஆண்டு நம்பர் மாதம் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பாலிவுட் ஹீரோயின்களுக்கே சவால் விடும் ஸ்டைலிஷ் உடையில் அட்லீ மனைவி பிரியா! குதூகல ரொமான்டிக் போட்டோஸ்!

திருமணத்திற்கு முன்பே அமலா பால் கர்ப்பமாக இருந்த நிலையில், தற்போது... அமலா பால் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். முழுக்க முழுக்க தன்னுடைய கர்ப்பகாலத்தை கணவருடன் செலவழித்து வருவதோடு, தனக்கு பிடித்த வற்றை செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது நீச்சல் குளம் பக்கத்தில் இவர் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது நடந்து வருவது போல் எடுக்கப்பட்ட BTS வீடியோ ஒன்றை அமலா பால் சமூக வலைத்தளத்தில் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மார்பிங் போட்டோ வெளியிட்டு மிரட்டியவர்களுக்கு சின்மயி கொடுத்த செருப்படி ரிப்ளை..!
விஜய் மத பாகுபாடு பார்க்கவே மாட்டார்..! நெகிழ்ந்து நெக்குறுகும் ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன்