நடிகர் ராம்சரண் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அவர் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியிடப்பட்டு உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் கேம் சேஞ்சர். முதல்வன் பட பாணியில் அரசியல் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகி வருகிறது. இப்படத்திற்காக முதன்முறையாக தெலுங்கு நடிகர் ராம்சரண் உடன் கூட்டணி அமைத்துள்ளார் இயக்குனர் ஷங்கர். இப்படத்தில் நடிகர் ராம்சரணுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்திருக்கிறார்.
கேம் சேஞ்சர் படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜின் எழுதிய கதையை தான் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர். இதுவரை ஏ.ஆர்.ரகுமான் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோருடன் மட்டுமே பணியாற்றி வந்த இயக்குனர் ஷங்கர் முதன்முறையாக இப்படத்திற்காக இசையமைப்பாளர் தமன் உடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... Lollu Sabha Seshu: அடடா.. மறைந்த லொள்ளு சபா சேஷுவுக்கு இப்படி ஒரு ஆசையா? கடைசி வரை அது நிறைவேறாமலே போயிடுச்சே!
இசையமைப்பாளர் தமன் நடிகனாக அறிமுகமானது ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தின் மூலம் தான். அப்படத்திற்கு பின்னர் சுமார் 21 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஷங்கருடன் கூட்டணி அமைத்துள்ளார் தமன். ஆனால் இம்முறை இசையமைப்பாளராக பணியாற்றி உள்ளார். அவர் இசையமைப்பில் உருவாகி இருக்கும் ஜரகண்டி என்கிற முதல் பாடலை இன்று படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
நடிகர் ராம்சரணின் பிறந்தநாளான இன்று அவரது ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் ஜரகண்டி பாடல் வெளியிடப்பட்டு உள்ளது. இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். இப்பாடலுக்காக போடப்பட்ட பிரம்மாண்ட செட்டில் ராம்சரணும், கியாரா அத்வானியும் நடனமாடும் காட்சிகளுடன் வெளியாகி இருக்கும் அதன் லிரிக்கல் வீடியோ இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
இதையும் படியுங்கள்... CSK வீரருடன் காதலா? காட்டுத்தீ போல பரவிய தகவல்; வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை