அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
உத்திர பிரதேசத்தில், கட்டப்பட்டு வந்த அயோத்தி ஸ்ரீ ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் ஜனவரி 22ஆம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்ம பூமி அறக்கட்டளை சேர்ந்தவர்கள் செய்து வருகின்றனர். மேலும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள், ஆன்மீக பெரியோர், மற்றும் பிரபலங்களுக்கு ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டளை சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தற்போது 'அயோத்தி, ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா சார்பில், நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து, அவர்களையும், கும்பாபிஷேக நிகழ்வுக்கு வரவேண்டி அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்திற்கு, இன்று ஆர்.எஸ்.எஸ் தென் பாரத அமைப்பாளர் செந்தில்குமார், தென்பாரத மக்கள் செயலாளர் (மக்கள் தொடர்பு) பிரகாஷ், மாநில இணைச்செயலாளர் (மக்கள் தொடர்பு) இராம இராஜசேகர், மாநகர் பொறுப்பாளர் ராம்குமார் மற்றும் பாஜக, சமூக ஊடகப் பார்வையாளர் அர்ஜுனமூர்த்தி ஆகியோர் அழைப்பிதழை வழங்கினர்.
அழைப்பிதழை பெற்றுக்கொண்ட ரஜினிகாந்த் உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், மிகவும் பாக்கியமாகக் இதை கருதுவதாகவும், எல்லாம் ஶ்ரீராமரின் அருள் எனவும் உணர்வுப்பூர்வமாக கூறியதாக தெரிகிறது. ராமர் கோவில், கும்பாபிஷேகம் நடக்க இன்னும் 20 நாட்களே எஞ்சியுள்ள நிலையில், உத்தர பிரசேதத்தில் பக்கதர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்வதற்கான பணிகள் முடக்கி விட பட்டுள்ளது.