ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய ஜூனியர் என்டிஆர்.. ஆர்ஆர்ஆர் நடிகருக்கு என்ன ஆச்சு! ரசிகர்கள் ஷாக்!

Published : Jan 02, 2024, 08:31 AM IST
ஜப்பான் நிலநடுக்கத்தில் சிக்கிய ஜூனியர் என்டிஆர்.. ஆர்ஆர்ஆர் நடிகருக்கு என்ன ஆச்சு! ரசிகர்கள் ஷாக்!

சுருக்கம்

பிரபல நடிகர் ஜூனியர் என்டிஆர் ஜப்பானில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்ட போது அங்கிருந்துள்ளார். தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் ஆஸ்கார் விருது பெற்ற 'ஆர்ஆர்ஆர்' படத்தில் க நடித்த ஜூனியர் என்டிஆர், கடந்த ஒரு வாரமாக ஜப்பானில் விடுமுறையில் இருந்தார் என்று கூறப்படுகிறது. ஜப்பான் நாட்டின் ஹொன்ஷு தீவுகள் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று எற்பட்டது. அடுத்தடுத்து 7.2 ரிக்டர் முதல் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாலும் அவை கடலுக்கு அடியில் மையம் கொண்டிருந்ததாலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதுவரை ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 6க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. சுனாமி அலைகள் தாக்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜூனியர் என்டிஆர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அடிக்கடி வெளிநாடு செல்வார்கள். இந்த ஆண்டு, அவர் தனது மனைவி லட்சுமி பிரணதி மற்றும் அவரது இரண்டு குழந்தைகளான அபய் மற்றும் பார்கவ் ஆகியோருடன் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை ஜப்பானில் கழித்தார்.

நிலநடுக்கம் ஏற்பட்ட போது ஜப்பானில் இருந்த நடிகர் ஜூனியர் என்டிஆர், X- தளத்தில் இதுகுறித்த பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “"ஜப்பானில் இருந்து இன்று வீடு திரும்பினேன். ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். கடந்த வாரம் முழுவதும் அங்கேயே இருந்தேன். பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் அதிலிருந்து மீண்டு குணமடைய வேண்டும் என்று நம்புகிறேன். வலிமையாக இருங்கள், ஜப்பான்” என்று பதிவிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

ஜனவரி 1 ஆம் தேதி, ஜூனியர் என்டிஆர், அவரது மனைவி மற்றும் இரண்டு மகன்கள் ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தனர். ஜூனியர் என்டிஆர் இயக்குனர் கொரட்டாலா சிவா இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியாகும் 'தேவரா' படத்தில் பிஸியாக இருக்கிறார். 2023 கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது நடிகர் வேலையில் இருந்து சிறிய இடைவெளி எடுத்தார். ஜனவரி 1 ஆம் தேதி, 'தேவரா' தயாரிப்பாளர்கள் ஒரு புதிய போஸ்டரை வெளியிட்டனர்.

அதே போல தேவரா படத்தின் பர்ஸ்ட் லுக் ஜனவரி 8 ஆம் தேதி வெளியிடப்படும் என்று உறுதியளித்தனர். 'தேவரா' படத்தின் முதல் பாகம் ஏப்ரல் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ஜூனியர் என்டிஆர் தவிர, ஜான்வி கபூர் மற்றும் சைஃப் அலி கான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தியாவின் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்.. ஓலா ஸ்கூட்டரின் தாறுமாறான அம்சங்கள்..

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அரோரா போட்ட கேஸில் ஆடிப்போன பாரு ! அடித்து ஓட விட்ட விக்ரம்!
சூப்பர்ஸ்டாரின் டைம்லெஸ் மாஸ் மூவீஸ் : மிஸ் பண்ணாம பார்க்க வேண்டிய டாப் 10 ரஜினி படங்கள்