
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கடந்த டிசம்பர் மாதம் 14ம் ஐதராபாத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த பட ஷூட்டிங் நடைபெற்றது. ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் நடந்த ஷூட்டிங்கின் போது அதில் பங்கேற்ற 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதியானது. டிசம்பர் 23ம் தேதி ரத்து செய்யப்பட்ட படப்பிடிப்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2021 மார்ச் 15ல் மீண்டும் சென்னையில் தொடங்கியது. முதலில் சென்னையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
தற்போது ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்று வந்தது. கொரோனா 2வது அலை தீவிரமாக உள்ள சூழ்நிலையில் ஷூட்டிங் நடப்பதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டது. அதிக எச்சரிக்கையுடன் படக்குழுவும் செயல்பட்டது.
புயல் வேகத்தில் ஷூட்டிங் நடைபெற்ற நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சம்பந்தமான காட்சிகள் அனைத்தும் நிறைவடைந்து. இதையடுத்து ரஜினிகாந்த் தனி விமானம் மூலமாக இன்று சென்னை வந்திறங்கினார். ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் செம்ம கெத்தாக சென்னை விமான நிலையம் வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து காரில் போஸ் கார்டனில் உள்ள இல்லத்திற்கு சென்ற ரஜினிகாந்திற்கு அவருடைய மனைவி லதா ரஜினிகாந்த் வாசலிலேயே ஆரத்தி எடுத்து வரவேற்றார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.