
தமிழ் சினிமாவில் சுமார் 20 வருடங்களாக, காமெடி மற்றும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த, நடிகர் மாறன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது, திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகள்: #BREAKING அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி... பிரபல காமெடி நடிகர் மாரடைப்பால் மரணம்...!
கொரோனா தொற்றுக்கு, கோலிவுட் திரையுலகை சேர்ந்த பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகிறார்கள். அந்த வகையில், கடந்த வாரம், தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகரும், அதிமுக கொடியை வடிவமைத்தவருமான நடிகர் பாண்டு கொரோனா தொற்றால் மரணமடைந்தார். அன்றைய தினமே ஆட்டோகிராப் படத்தில் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடலில் நடித்த கோமகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். மேலும் இயக்குனர் தாமிரா, ஜோக்கர் துளசி என அடுத்தடுத்து, முக்கிய பிரபலங்களை பலிவாங்கியது கொரோனா.
இவர்களை தொடர்ந்து, 48 வயதே ஆகும், விஜய் பட நடிகர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். நடிகர் மாறன் 2000 ஆம் ஆண்டு வெளியான, வேதம் என்கிற படத்தின் மூலம் அறிமுகமாகி, தளபதி விஜய் நடித்த 'கில்லி' படத்தில் ஆதிவாசி என்கிற வேடத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். மேலும் டிஷ்யும், தலைநகரம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் செய்திகள்:மெகா பட்ஜெட் நிகழ்ச்சிக்கு... ஹெலிகாப்டரில் வந்து கெத்தாக இறங்கிய விஜய் சேதுபதி! வைரல் வீடியோ...
செல்கல்பட்டு மாவட்டம் நத்தம் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வந்த இவர், கொரோனா தொற்று காரணமாக செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூச்சு திணறல் காரணமாக அவதிப்பட்டு வந்த இவருக்கு தீவிர சிகிச்சை அளித்த போதிலும் சிகிச்சைபாலனின்றி உயிரிழந்தார். நடிகர் மாறனின் மறைவு, தமிழ் திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் பலர் தொடர்ந்து இவருக்கு தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.