மெகா பட்ஜெட் நிகழ்ச்சிக்கு... ஹெலிகாப்டரில் வந்து கெத்தாக இறங்கிய விஜய் சேதுபதி! வைரல் வீடியோ...

By manimegalai aFirst Published May 11, 2021, 8:12 PM IST
Highlights

திரைப்படங்களில் மட்டும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்யாமல், சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் வித்தியாசம் காட்டி வருபவர் விஜய் சேதுபதி. அந்த வகையில் இவர் அடுத்ததாக, களமிறங்க உள்ள தனியார் நிகழ்ச்சின் புரோமோவில், வித்தியாசமாக 'ஹெலிகாப்டரில்' வந்து இறங்கி கெத்து காட்டியுள்ளார்.
 

திரைப்படங்களில் மட்டும் வித்தியாசமான கதாபாத்திரத்தை தேர்வு செய்யாமல், சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதிலும் வித்தியாசம் காட்டி வருபவர் விஜய் சேதுபதி. அந்த வகையில் இவர் அடுத்ததாக, களமிறங்க உள்ள தனியார் நிகழ்ச்சின் புரோமோவில், வித்தியாசமாக 'ஹெலிகாப்டரில்' வந்து இறங்கி கெத்து காட்டியுள்ளார்.

இந்த புரோமோ வீடியோ... தற்போது வைரலாகி வருகிறது. விஜய் டிவி தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நிகராக ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டது என்றால் அது, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியின் சீசன் 2  சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், சீசன் 3 க்காக பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. எனினும் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதிகமாகி உள்ளதால், கொரோனா தொற்று சற்று தணிந்த பிறகே 'குக் வித் கோமாளி' சீசன் 3 குறித்த பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இதே போல் சமையல் நிகழ்ச்சியை மையமாக வைத்து 'மாஸ்டர் செஃப்' என்கிற நிகழ்ச்சியை பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான நேர்முக கானல் சமீபத்தில் உரிய கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் நடந்தது. இது குறித்த சில காட்சிகள் வெளியானது. மேலும் சமையல் மீது ஆர்வம் உள்ள, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக, விஜய் சேதுபத்தில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான புரோமோ சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், செம்ம கெத்தாக ஹெலிகாப்டரில் வந்து இறங்குகிறார் விஜய் சேதுபதி.

இது குறித்த புரோமோ இதோ... 

உலக அளவில் புகழ்பெற்ற சமையல் கலையின் பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி!

விஜய் சேதுபதி அவர்களுடன்..

மாஸ்டர் செஃப் - தமிழ் | விரைவில்... pic.twitter.com/bHkL9HGunx

— Sun TV (@SunTV)

click me!