கொரோனாவில் இருந்து பூரணமாக குணமடைந்த தனுஷ் பட நடிகை..! அவரே வெளியிட்ட தகவல்..!

Published : May 11, 2021, 06:58 PM IST
கொரோனாவில் இருந்து பூரணமாக குணமடைந்த தனுஷ் பட நடிகை..! அவரே வெளியிட்ட தகவல்..!

சுருக்கம்

விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சஷன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அம்மு அம்பிரமி. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.   

விஷ்ணு விஷால் நடித்த 'ராட்சஷன்' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தனுஷ் நடித்த ’அசுரன்’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் அம்மு அம்பிரமி. சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: பாக்கியலட்சுமி சீரியல் நடிகருடன் காதல்..? சிக்கிய செம்பருத்தி சீரியல் ஹீரோயின் ஷபானா!
 

கோலிவுட் திரையுலகினர் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இதுவரை நடிகர் அதர்வா, அஜித் பட நடிகை சமீரா ரெட்டி, பூஜா ஹெக்டே, சூர்யா, மாதவன் என  கொரோனாவால் பாதிக்கப்பட்ட கோலிவுட் பிரபலங்களின் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவரான அம்மு அபிராமி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். 'ராட்சசன்', 'அசுரன்', என ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தாலும், சிறந்த கதைக்களத்தை தேர்வு செய்து நடிப்பதால் மக்கள் மனதில் பதித்தவர் அம்மு அபிராமி. தற்போது இவர் ஹீரோயினாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்: விஜய் கூட ஆடும் போது 2 மாசம் கர்ப்பம்... அஜித் கிட்ட திட்டு வாங்கினேன்.. மாளவிகா பகிர்ந்த மலரும் நினைவுகள்!
 

இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மே 3 ஆம் தேதி அன்று, கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென காய்ச்சல் ஏற்பட்டதாகவும்,  இதனையடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டதை அடுத்து தனக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், இதனை அடுத்து மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.  மேலும் மருத்துவர் பரிந்துரையின்படி மருந்துகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். முன்பை விட வலிமையாக மீண்டும் குணமாகி திரும்புவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள், அதிக கவனமாக இருங்கள்’ என்று கூறி இருந்தார்.

மேலும் செய்திகள்:வாடியம்மா ஜக்கம்மா... வந்து நில்லு பக்கமா... ஸ்லிம் லுக் கவர்ச்சியில் நெட்டிசன்களை கவர்ந்திழுக்கும் கிரண்..!
 

இதையடுத்து, தற்போது கொரோனா தொற்றில் இருந்து மிக விரைவில் பூரணமாக குணமமடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில் அவர் கூறியுள்ளதாவது "மிகவும் சந்தோஷமாக இருப்பதாகவும் கடவுள் அருளாலும், அனைவருடைய பிராத்தனையினாலும், பூரணமாக கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து விட்டதாகவும், கொரோனா சோதனையில் தனக்கு நெகட்டிவ் என வந்துவிட்டதாகவும், அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, மாஸ் அணிவது கட்டாயம் என்றும், முடிந்த வரை வெளியில் செல்லாமல் வீட்டில் பத்திரமாக இருங்கள் என கேட்டு கொண்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?