மருத்துவ செட் பயன்படுத்திய பொருட்கள் அனைத்தையும் மருத்துவமனைக்கு வழங்கிய படக்குழு!

By manimegalai aFirst Published May 11, 2021, 5:46 PM IST
Highlights

பிரபல நடிகரின் படத்தில் மருத்துவமனை செட்டுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் நன்கொடையாக அளித்துள்ளது மக்கள் மத்தியில் பாராட்ட பட்டு வருகிறது.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை, மத்திய மற்றும் மாநில அரசுகள் எடுத்து வந்தாலும், கொரோனாவின் இரண்டாவது அலையால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. பலர் மருத்துவமனைகளில், படுக்கை இல்லாமல் அவதி பட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரபல நடிகரின் படத்தில் மருத்துவமனை செட்டுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அனைத்தையும் நன்கொடையாக அளித்துள்ளது மக்கள் மத்தியில் பாராட்ட பட்டு வருகிறது.

சமீப காலமாக, முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களில் ஒவ்வொரு கட்சியும் தத்ரூபமாக வர வேண்டும் என்பதற்காக... உண்மையான பொருட்களையே பல லட்சம் செலவு செய்து செட் அமைக்கிறார்கள். அந்த வகையில், தற்போது நடிகர் பிரபாஸ் நடித்து வரும் 'ராதே ஷியாம்' படத்திற்கு, உண்மையான படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள், வெடில்டோர் போன்றவை பயன்படுத்தி செட் போடப்பட்டது. 

பெருவாரியான காட்சி மருத்துவமனையில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்ததும், அனைத்து பொருட்களையும் பிரிக்க படக்குழு முடிவு செய்தனர். அப்போது தனியார் மருத்துவமனை ஒன்று, கொரோனா நோயாளிகள் பலர், உரிய படுக்கை வசதிகள் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாகவும், எனவே மருத்துவமனை போன்று போடப்பட்ட செட்டின் பொருட்களை அப்படியே மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்து வேண்டும் என வேண்டுகோள் வைத்தனர்.

இதனை ஏற்று கொண்ட 'ராதே ஷியாம்' படக்குழு...  50 படுக்கைகள் கொண்ட கட்டில்கள், மெத்தைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஸ்ட்ரெச்சர்கள், வென்டிலேட்டர் ஆகியவை ஒரிஜினல் ஆகவே இந்த படத்தில் பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களையும் அந்த தனியார் மருத்துவமனைக்கு நன்கொடையாக கொடுத்துள்ளனர் இந்த தகவல் வெளியாகி, மக்கள் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியா நடிக்கிறார். 80 சதவீதத்திற்கும் மேல் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பு, கொரோனா தொற்றுக்கு இடையிலும் நடக்குமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

click me!