தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி எப்படி இருக்கிறார்? உடல்நிலை குறித்து சற்று முன் வெளியான தகவல்..!

Published : May 12, 2021, 10:58 AM IST
தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளி எப்படி இருக்கிறார்? உடல்நிலை குறித்து சற்று முன் வெளியான தகவல்..!

சுருக்கம்

'ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்தின், உரிமையாளர் ராம நாராயணனின், மகனும் தேனாண்டாள் நிறுவனத்தின் சார்பில் தற்போது படங்களை தயாரித்து வரும், தயாரிப்பாளர் முரளி, மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவரது உடல்நிலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.  

'ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவனத்தின், உரிமையாளர் ராம நாராயணனின், மகனும் தேனாண்டாள் நிறுவனத்தின் சார்பில் தற்போது படங்களை தயாரித்து வரும், தயாரிப்பாளர் முரளி, மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவரது உடல்நிலை குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

குழந்தைகள் ரசிக்கும் விதமாக, குரங்கு, நாய், யானைகள் என்று... வித்தியாசமான படங்களை இயக்கியும், தயாரித்தும் உள்ளவர் ராமநாராயணன். இவரது மறைவிற்கு பின்னர், இவருடைய மகன் மற்றும் மருமகள் ஆகியோர் 'ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்' சார்பில் படங்களை தயாரித்து வருகின்றனர். அந்த வகையில் கடைசியாக இவர் தயாரிப்பில், தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. இதைத்தொடர்ந்து சுமார் ஐந்து வருடங்களுக்கு பின், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் படத்தை தயாரித்து வருகின்றனர்.

மேலும் தேனாண்டாள் முரளி,  தமிழ்  திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவராகவும் உள்ளார். தமிழ் திரையுலகின் நலன் கருதி, சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து, திரைப்பட தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கொரோனா தொற்று பரவல் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே, பாதிக்கப்படும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் காக்கப்பட வேண்டும் என கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.

இந்நிலையில் தற்போது இவர், மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார். இவரது இதய குழாயில் இருந்த அடைப்புகள் நீக்கப்பட்டு, தற்போது அவர் நாமாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் விரைவில், நலம்பெற வேண்டும் என பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!