Puneeth Rajkumar: ரொம்ப ரொம்ப வேதனை பட்டேன்!! ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லை.. இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்!!

Published : Nov 10, 2021, 04:17 PM IST
Puneeth Rajkumar: ரொம்ப ரொம்ப வேதனை பட்டேன்!! ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லை.. இரங்கல் தெரிவித்த ரஜினிகாந்த்!!

சுருக்கம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rjinikanth), மருத்துவ சிகிச்சைக்கு பின்... பிரபல கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் (Puneeth Rajkumar) மறைக்கு இரங்கல் தெரிவித்து hoote ஆப்-ல் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.  

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், மருத்துவ சிகிச்சைக்கு பின்... பிரபல கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் மறைக்கு இரங்கல் தெரிவித்து hoote ஆப்-ல் வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

பிரபல கன்னட பவர் ஸ்டார் நடிகர் புனித் ராஜ்குமார், கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தன்னுடைய வீட்டில் உடல் பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது, ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக, காலமானார். இவருடைய திடீர் மரணம் கன்னட திரையுலகை மட்டும் இன்றி, ஒட்டு மொத்த திரையுலகை சேர்ந்தவர்களையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்தது. புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாத பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் அவரது நினைவிடத்திற்கு சென்று தொடர்ந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: Dance master Jayanth: அதிர்ச்சி.. நடன இயக்குனர் கூல் ஜெயந்த் மரணத்திற்கு இதுதான் காரணமா? சோகத்தில் திரையுலகம்

 

அந்த வகையில் கடந்த வாரம், பிரபல நடிகர் சூர்யா புனீத் ராஜ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள பெங்களூரு காண்டீரவா ஸ்டூடியோவில் நேரில் சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். இதை தொடர்ந்து நேற்றைய தினம் பிரபல நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்த புகைப்படங்களும் நேற்றைய தினம் வெளியாகி வைரலானது. இவருடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உள்ளிட்டவர்களும் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: Valimai Movie: பார்த்தாலே கொல நடுங்குது.. இப்படி ஒரு காட்சியில் நடித்தாரா தல அஜித்! 'வலிமை' நியூ BTS போட்டோஸ்!

 

இந்நிலையில் புனித் ராஜ்குமார் மறைவின்போது சென்னை காவேரி மருத்துவமனையின் திடீர் உடல்நகுறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த், புனித் ராஜ்குமார் மறைவே தனக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு தான் தெரியும் என்று கூறி தன்னுடைய இரங்கலை hoote செயலி மூலம் குரல் பதிவாக வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: Keerthy Suresh: சத்தமில்லாமல் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய கீர்த்தி சுரேஷ்... அட ஹீரோ இந்த வில்லன் நடிகரா?

 

இதில் அவர் கூறியுள்ளதாவது, "அனைவருக்கும் வணக்கம், எனக்கு சிகிச்சை முடிந்து நன்கு குணமாகி வருகிறேன். நான் மருத்துவமனையில் இருக்கும் போது, புனீத் ராஜ்குமார் அவர்கள் அகால மரணம் அடைஞ்சிருக்காங்க. அந்த விஷயத்தை எனக்கு இரண்டு நாள்கள் கழித்து தான் சொன்னார்கள். அதை கேட்டு ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டேன். என் கண் முன்னால் வளர்ந்த குழந்தை. அன்பும் பண்பும் உள்ள அருமையான குழந்தை. நல்ல பெயருடனும், புகழுடனும் உச்சத்தில் இருக்கும் போது சின்ன வயசுலேயே நம்பை விட்டு அவங்க மறைஞ்சிருக்காங்க.அவருடைய இழப்பு கன்னட சினிமா துறையில் ஈடுகட்ட முடியாத ஒன்று.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகளே இல்லை புனீத் ராஜ்குமார் ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பிக் பாஸ் எலிமினேஷனில் செம ட்விஸ்ட்... அதிரடியாக எவிக்ட் ஆன இரண்டு பேர் யார்... யார்?
சென்னைக்கு 6500 ரூபா டிக்கெட் இப்போ 83 ஆயிரம்... இண்டிகோ பிரச்சனையால் வெளிமாநிலத்தில் லாக் ஆன ரோபோ சங்கர் மகள்