அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்ட பிசாசு 2 ; முக்கிய வேடத்தில் வரும் விஜய் சேதுபதி

Kanmani P   | Asianet News
Published : Nov 10, 2021, 04:03 PM ISTUpdated : Nov 10, 2021, 04:11 PM IST
அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்ட பிசாசு 2 ; முக்கிய வேடத்தில் வரும் விஜய் சேதுபதி

சுருக்கம்

1400 ஏக்கர் கொண்ட அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்ட மிஷ்கினின் பிசாசு 2 படத்தில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.         

2006-ம் ஆண்டு சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் இயக்குனரான அஞ்சாதேநந்தலாலா, சேரன் நடித்த யுத்தம் செய், ஜீவாவின் முகமூடி உள்ளிட்ட மாறுபட்ட கதை களத்தை இயக்கியவர் மிஷ்கின்.இவர் இயக்கி நடித்திருந்த மிஷ்கின் நடிப்பில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும் நல்ல வெற்றியை பெற்றிருந்தது.

இதை தொடர்ந்து அறிமுக நாயகன் நாகா, பிரியாகா மார்ட்டின்., ராதாரவி உள்ளிட்டோரை வைத்து பிசாசு என்னும் படத்தை இயக்கியிருந்தார். ஹாரர் படமான இதில் தன்னை கார் ஏற்றி கொன்ற நாயகனை இறந்த பிறகும் காப்பாற்றும் ஆத்மா என்னும் கதை கருவோடு இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது. மக்களிட ஹாரர் வெற்றி  பெற்ற இந்த  படத்தை தனது கொண்தடகால் மிரட்டிய ஒளிப்பதிவாளர் ரவி ராய் 2018 -ல் வெளியான சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்கள் படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெண்கள் ,குழந்தைகள் மத்தியில் பேசப்பட்ட இந்த படத்தின் இரண்டாம் பாகம் 7 வருடங்களுக்கு பிறகு இதன் இரண்டாம் பக்கம் உருவாக்கப்பட்டு வருகிறது. இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள இந்த படம் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டுள்ளது. பார்த்தவுடன் அச்சுறுத்தும் தோற்றம் கொண்ட இந்த காடு சுமார் 1400 ஏக்கர் அளவு கொண்டது. வினோத் பட்டு என்பவருக்கு சொந்தமான இந்த காட்டில் தான் பிசாசு படம் முழுக்க படமாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தது வரும் இந்த படத்தில் ஆண்ட்ரியா பேயாகவும், பூர்ணா, பிகில் காயத்ரி,குட்டி நமிதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.ராக் போர்ட் தயாரிக்கும் இந்த படத்தில் கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். 2022-ல் திரையிட இந்த படம் தயாராகி வருவதாக சொல்லபப்டுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

காந்தா முதல் பைசன் வரை.... 2025-ம் ஆண்டு IMDb-ல் அதிக ரேட்டிங்கை வாரிசுருட்டிய டாப் 10 படங்கள்..!
மகளுக்காக நடிகையை ஸ்கெட்ச் போட்டு கடத்திய தயாரிப்பாளர்: திரையுலகில் பரபரப்பு