'அயோத்தி' படத்தை பார்த்து... சசிகுமாரை புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார்!

By manimegalai a  |  First Published Apr 11, 2023, 8:04 PM IST

சசிகுமார் நடிப்பில் வெளியான 'அயோத்தி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இந்த படத்தை பார்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சசிகுமார் மற்றும் படக்குழுவினருக்கு.. சமூக வலைதளம் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
 


தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் நடிகராக மாறியவர் சசிகுமார். ஆரம்பத்தில் இயக்குனர் பாலா மற்றும் அமீர் ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர், முதல் முதலில் இயக்கிய சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம், தன்னை ஒரு திறமையான இயக்குனர் என நிரூபித்த சசிகுமார், பின்னர் மெல்ல மெல்ல நடிப்பிலும் கவனம் செலுத்த துவங்கினார்.

தொடர்ந்து திரைப்படத்தில், நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் கிடைத்ததால்... படம் இயக்குவதை ஓரம் கட்டி வைத்து விட்டு, வெற்றிவேல், சுந்தரபாண்டியன், நாடோடிகள், பேட்டை, எம்ஜிஆர் மகன், போன்ற படங்களில் வரிசையாக நடித்தார். இவர் நடித்த பாடல் சூப் ஹிட் வெற்றி பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகி, சசிகுமாரை தமிழ் சினிமாவில் நிலையான நடிகராக மாற்றியது.

Latest Videos

மேடையில் சட்டையை கழட்டி... சிக்ஸ் பேக்கை காட்டி பூஜா ஹெக்டேவை மிரள வைத்த சல்மான் கான்! வைரலாகும் வீடியோ!

 இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'அயோத்தி'. உண்மை கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம்ம், மனிதாபிமானம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக எடுக்கப்பட்டிருந்தது. இப்படம் வெளியாகி பிரபலங்கள், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாராட்டுகளை குவித்து வந்த நிலையில்... இப்படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சசிகுமார் மற்றும் படக்குழுவினரை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளி உள்ளார்.

சந்தானம் பட ஹீரோயினுக்கு இந்த நிலையா? மருத்துவமனையில் படுத்த படுக்கையாக இருக்கும் விஷாகா சிங்! ஷாக்கிங் போட்டோ

 இது குறித்து ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டரில் போட்டுள்ள பதிவில், "அயோத்தி...  நண்பர் சசிகுமாருக்கு ரொம்ப நாட்களுக்கு பிறகு அருமையான கருத்துள்ள ஒரு வெற்றிப்படம். முதல் படத்திலேயே தன்னை ஒரு தலை சிறந்த இயக்குனர் என்று நிரூபித்திருக்கிறார் ஆர் மந்திரமூர்த்தி. தயாரிப்பாளருக்கு என்னுடைய பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என பதிவிட்டுள்ளார்.  இதை தொடர்ந்து தலைவரின் வாயாலேயே இப்படி ஒரு வாழ்த்தை பெற்றுள்ளது அயோத்தி படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Superstar Never Fails to Appreciate the Good Films..🤝 ❣️ pic.twitter.com/gbasWRgXMu

— Laxmi Kanth (@iammoviebuff007)

 

click me!