
பொதுவாகவே திரையுலகில் மிகவும் பிரபலமானவர்களுக்கு, மர்ம நபர்கள் சிலர் கொலை மிரட்டல் விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். அந்த வகையில், தற்போது பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார், சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல முறை, இதுபோன்ற மிரட்டல்கள் அவருக்கு வந்திருந்தாலும், இந்த முறை போன் செய்த நபர் அவரை கொலை செய்ய நாள் குறித்துள்ளது தான் செம்ம ஹை லைட்டாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஏப்ரல் 10ம் தேதி, அதாவது நேற்று இரவு 9 மணிக்கு... மும்பை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, போன் கால் மூலம் இந்த மிரட்டல் விடப்பட்டது. அதில் பேசிய அந்த மர்ம நபர், தன்னை ஜோத்பூரைச் சேர்ந்த, கவுரக்ஷக் ராக்கி பாய் என்று கூறி உள்ளார். மேலும் ஏப்ரல் 30, 2023 அன்று சல்மான் கானை நான் கொண்டு விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த போன் கால் செய்தது யார் என போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.
அந்த நபர் எங்கிருந்து போன் செய்துள்ளார் என்கிற தகவல் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நபரையும் தீவிரமாக தேடி வருகிறார்கள். அதன் பின்னரே, என்ன நோக்கத்தில் அந்த நபர் இது போன்ற கொலை மிரட்டல் விடுத்தார் என்பது தெரியவரும்.
தற்போது சல்மான் கான் 'கிசி கா பாய் கிசி கி ஜான்' படத்தின் புரமோஷன் பணியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளியான நிலையில், பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான, 'வீரம்' படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் ட்ரைலருக்கு வேற லெவல் வரவேற்பு கிடைத்தபோதிலும் , தமிழ் ரசிகர்கள்... வீரம் படத்தை கொத்து கறி போட்டு வைத்துள்ளது போல் உள்ளது என ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ஃபர்ஹாத் சம்ஜி இயக்கிய, கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் ஏப்ரல் 21, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் பாக்யஸ்ரீ, வெங்கடேஷ் டக்குபதி மற்றும் விஜேந்தர் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா ஹேக்டே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.