'அரண்மனை 3 ' முதல் இரண்டு பாகத்தை விட, ஹரரில் வேற லெவலுக்கு மிரட்டி இருக்கும் சுந்தர் சி!! ட்ரைலர் இதோ...

Published : Sep 30, 2021, 05:42 PM ISTUpdated : Sep 30, 2021, 05:43 PM IST
'அரண்மனை 3 ' முதல் இரண்டு பாகத்தை விட, ஹரரில் வேற லெவலுக்கு மிரட்டி இருக்கும் சுந்தர் சி!! ட்ரைலர் இதோ...

சுருக்கம்

அரண்மனை 3 படம், ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பார்பவர்களையே மிரள செய்துள்ளது.  

அரண்மனை 3 (Aranmanai 3) படம், ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பார்பவர்களையே மிரள செய்துள்ளது.

இயக்குனர் சுந்தர்.C (Sunder .C) இயக்கத்தில் உருவாகி, பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே வெளியாகியுள்ள இந்த படத்தின் பாகங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, 3 ஆவது பாகமும் தயாராகியுள்ளது.

மேலும் செய்திகள்: தொடையாழகி ரம்பாவையே மிஞ்சும் அளவிற்கு... ஷார்ட் ஸ்கர்ட்டில் போஸ் கொடுக்கும் ராஷி கண்ணா!!

 

இதில், நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளார், மேலும் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர். யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் போஸ்டர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் ட்ரைலருக்கும் அதே அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்: நடிகை தமன்னா தீவிர உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டாரா? முழு விவரம் இதோ...

 

ஒவ்வொரு காட்சியிலும் ஹாலிவுட் தரத்திற்கு சுந்தர் சி மிரட்டியுள்ளார். மேலும் ராஷி கண்ணாவின் கவர்ச்சியும் கண்ணை கட்டுகிறது. நடிகை ஆண்ட்ரியா கர்ப்பிணியாக இருப்பது போல் ஒரு சில சீன்களில் நடித்துள்ளர். ஆர்யா, பேயாக மிரட்டியுள்ள காட்சிகளும் ட்ரைலரில் வெளியாகியுள்ளது. ஏன் ஆர்யா பேயாக மாறுகிறார்? ஆண்ட்ரியாவுக்கு என்ன நடந்தது? என விறுவிறுப்பு பரபரப்பு குறையாமல் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது ட்ரைலரை பார்த்தாலே தெரிகிறது.

மேலும் செய்திகள்: ரசிகர் கேட்ட கேள்விக்கு சமந்தாவின் பளீச் பதில்..!! ஒரு வழியாக முடிவுக்கு வந்த வதந்தி..!!

 

அரண்மனை 3 அக்டோபர் 14 அன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, எழுதி இயக்கியுள்ளார் சுந்தர்.Cதயாரிப்பு - Avni Cinemax, Benzz மீடியா, C.சத்யா இசையமைத்துள்ளார். U.K.செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்ய, பெனி ஆலிவர் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தின் ஒட்டுமொத்த உரிமையையும் உதயநிதி பெற்றுள்ளார். ஆர்யா நடிப்பில் கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை தொடர்ந்து இந்த படமும் இவருக்கு வெற்றிப்படமாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!