
வெளிமாநிலத்தில் நடிகர்கள் தமிழகத்தில் நடிக்கலாம் பிழைக்கலாம் ஆனால் தமிழகத்தை தமிழன் தான் ஆளவேண்டும் என சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார்தங்கம் அதிரடியாக தெரிவித்துள்ளார் . சரவணன் அபூபக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் " எனக்கு ஒன்னு தெரிஞ்சாகணும் " இதன் இசை வெளியீட்டு விழா சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது . இதில் இயக்குனர் பாரதிராஜா சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
முன்னதாக பேசிய இயக்குனர் பாரதிராஜா சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில்தான் சென்னைக்கு வந்தேன் , ஆனால் இயக்குனராகிவிட்டேன் என் உருவத்தைப் பார்த்து கேலி செய்தவர்கள் மத்தியில் நான் நேர்மையாக இருந்ததால் 79 ஆவது வயதில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என கூறினார். பின்னர் பேசிய சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், புதிய திரைப்படங்கள் இணையதளத்தில் வெளியாவதை தடுக்க முன்னணி நடிகர்கள் தடுக்க முயற்சி செய்ய வேண்டும் என்றார் .
தொடர்ந்து பேசிய அவர் வெளிமாநில நடிகர்கள் தமிழகத்தில் நடிக்கலாம் , இங்கே வாழலாம் , ஆனால் தமிழகத்தை ஆள வேண்டும் என எண்ணக் கூடாது... அதற்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும். தமிழ் திரைத் துறையை பாதுகாக்க பாரதிராஜா தலைமையில் போராட தயாராக இருப்பதாகவும் அப்போது உணர்ச்சிப் பெருக்குடன் கூறினார் . நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இறங்க உள்ள நிலையில் ஜாக்குவார் தங்கம் அவரை குறிவைத்து தான் இப்படி பேசியுள்ளார் என நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசிக்கொண்டனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.