நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட அறிக்கை? ஏன் தெரியுமா...

Published : Sep 30, 2021, 07:12 PM IST
நடிகர் சிலம்பரசன் வெளியிட்ட அறிக்கை? ஏன் தெரியுமா...

சுருக்கம்

நடிகர் சிலம்பரசன் (Silambarasan) தன்னுடைய மன்றத்தின் பணிகளை விரிவு படுத்த உள்ளதாகவும், எனவே அதன் ஆலோசனை கூட்டத்தில், மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

நடிகர் சிலம்பரசன் தன்னுடைய மன்றத்தின் பணிகளை விரிவு படுத்த உள்ளதாகவும், எனவே அதன் ஆலோசனை கூட்டத்தில், மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள வேண்டும் என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்: யங் லுக்கில்... லெஹங்கா அணிந்து மிதமான கவர்ச்சியில் மெர்சலாக்கும் கஸ்தூரி!! லேட்டஸ்ட் கியூட் போட்டோஸ்...

கொரோனா பிரச்சனைகளுக்கு மத்தியில், படப்பிடிப்பு பணிகள் தற்போது உரிய பாதுகாப்புடன் நடந்து வரும் நிலையில், 'ஈஸ்வரன்' படத்திற்கு பின், அடுத்தடுத்த படங்களில் நடிகர் சிம்பு ஓய்வில்லாமல் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள 'மாநாடு' திரைப்படம், வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக உள்ளது. தற்போது வெந்து தணிந்த காடு படத்தில் நடித்து வரும் இவர், விரைவில்... 'பத்து தல' படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தன்னுடைய ரசிகர்கள் மன்றத்தை சேர்ந்த பொறுப்பாளர்களுக்கு சிம்பு அறிக்கை மூலம், ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். இந்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது,  மதிப்பும் பேரன்பும் கொண்ட, என் ரத்தத்தின் ரத்தமான என் உறவுகளே வணக்கம்...

மேலும் செய்திகள்: 'தாஜ்மகால்' மச்சக்கன்னியா இது? 40 வயதில் டாப் லெஸ் கவர்ச்சியில் கதிகலங்க வைக்கும் ரியா சென் படு ஹாட் போட்டோஸ்!

நீண்ட நாட்களாக இயற்கையின் செயல்களால், உங்களிடம் நேரடியாக உறவாடாமல் உங்கள் தொலைபேசி வாயிலாக உறவு கொண்டோம். மீண்டும் இளைஞர் அணி, வழக்கறிஞர் அணி, மருத்துவ அணி, தகவல் தொழில் நுட்ப அணி, கலை இலக்கிய அணியின் மூலம் மன்றத்தின் பணிகளை விரைவுபடுத்த உள்ளோம். ஆதலால் நம் நற்பணி மன்றத்தின் அகில இந்திய தலைவர் T .வாசு அவர்களின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.

ஆகையால் மாநில, மாவட்ட, வட்ட பொறுப்பாளர்கள் நமது தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்டு, கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். என்று நடிகர் சிலம்பரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!
2025-ஆம் ஆண்டு லோ பட்ஜெட்டில் உருவாகி... மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டிய டாப் 5 படங்கள்!